ஆடி மாத பலன் 2025: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. கடன் விஷயத்தில் ரொம்ப கவனம்
ஆடி மாத பலன் : ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான இந்த ஆடி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு நிகழப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் சனி வக்கிர கதியில் இயங்குகிறார். ஜூலை 12 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை சனி வக்ர கதியில் இயங்கப் போகிறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வையில் இருக்கிறார். சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனாக மிதுனத்தை நோக்கி பரிவர்த்தணை செய்கிறார்.

சூரிய பகவான் ஆடி மாதம் 1 ஆம் தேதி கடகத்துக்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடம் இருந்து தப்பித்து கன்னி வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்யப் போகிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும், என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம் ஆடி மாத பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு கிரக நிலைகள் அற்புதமாக இருக்கின்றன. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 6, 1, 12 ஆம் இடம் நன்றாக இயங்கப் போகின்றன. ஜூலை 24 ஆம் தேதிக்குப் பிறகு ராசிநாதன் 6 ஆம் வீட்டோடு இணையப் போகிறார். ராசிநாதன் இப்போது தன்னுடைய வீட்டில் அமர்ந்து, 2 ஆம் வீட்டை பார்ப்பது யோகமான காலகட்டமாக இருக்கும்.
சொந்த தொழில்
நிறைய நல்ல காரியங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். ஜூலை 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவுடன், ராசிநாதன் அமர்கிறார். 10 ஆம் இடமும் இயங்கப் போகிறது. 11, 10, 6, 1 ஆம் இடம் இயங்கப் போகிறது. வேலைவாய்ப்பு, தொழில், சொந்த தொழில் போன்றவை அமையும். குரு பகவானும், சுக்கிர பகவானும் இணையப் போகின்றனர். கடன் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆனால், அது சுப விரையத்துக்கான கடனாக இருக்கும். வேலையை விட்டு விட்டு சொந்த தொழில் தொடங்குவீர்கள். அதில் நிறைய விரையங்கள் ஏற்படும்.
கடன் வேண்டாம்
தேவையில்லாத கடன் வாங்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில் கடனில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. கணவன், மனைவிக்கான சிறு சிறு செலவுகள் செய்ய வேண்டிய வாய்ப்பு ஏற்படும். துலாம் ராசி பெண்களாக இருந்தால் கணவனின் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் கடன், வம்பு, வழக்கில் கவனமாக இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் நன்மை ஏற்படும். இந்த விஷயங்களில் மட்டும் கவனமாக இருந்தால் போதும்.
ஆன்மீக சேவை
நிறைய சேவைகளைச் செய்வீர்கள். அதன் மூலமாக கடவுளின் அனுக்கிரகங்கள் கிடைக்கும். போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். 11 ஆம் அதிபதி 10 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். கடன் வாங்கும் நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் விஷயத்தில் கவலை ஏற்படும். ஆன்மீக சேவைகளை செய்து மகிழ்வீர்கள்.
எச்சரிக்கை
படிக்கும் மாணவர்கள் கவனமாக இருப்பது நல்லது. 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் கடன் வாங்கும் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தேவையில்லாத எதிரி, வம்பு, வழக்கில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. 40 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களது துணையில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
தூக்கம் முக்கியம்
ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு 12 ஆம் இடத்தில் செவ்வாய் வருவதால் தூக்கமின்மை ஏற்படும். அதனால் தூங்கும் விஷயத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. எல்லா விஷயங்களிலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. தொழில் தொடங்கும் யோகம் உள்ளது. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
விரையம்
விரையத்தில் மட்டும் மிகுந்த கவனம் தேவை. திருச்செந்தூர் முருகன் வழிபாடு நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கும். சிவன் கோயிலில் இருக்கும் முருகன், பெருமாள் கோயிலில் இருக்கும் முருகனை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். ஏழை எளிய மக்களுக்கு உதவுவது, தண்ணீர் தானம் செய்வது அற்புத பலன்களைக் கொடுக்கும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications