Rasi Palan This Week: துலாம் ராசி வாழ்க்கையை தலைகீழாக மாற்ற போகும் அந்த ஒரு முடிவு
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்யோகம், குடும்பம், சமூகம் என்று உங்களின் தனிப்பட்ட செல்வாக்கு எல்லா இடங்களிலும் உயரப்போகிறது. உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். உத்யோகம், தொழிலில் இரண்டிலும் சிறப்பான ஏற்றம் காணப்படும். தொழிலில் லாபம் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு.
பலமடையும் வாக்கு
கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடந்த காலங்களில் தடைபட்ட காரியங்கள் விலகி, மனதில் நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி ஆட்கொள்ளும். உங்களின் வாக்கு ஸ்தானம் பலமடைய போகிறது. கொடுத்த வாக்கை சமூகம், வெளிவட்டாரம் எல்லாவற்றிலும் காப்பாற்றுவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கூடும்.
குழந்தைகளால் பெருமை
பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும். பெற்றோருடன் இருந்த மன சஞ்சலங்கள் நீங்கும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்யோகம், தொழில், கல்வியில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். உத்யோகத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளுடன் இருந்த மன கசப்புகள் விலகி, அவர்களால் பெருமை கொள்வீர்கள்.
பரிகாரம்
உத்யோகத்தில் உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் வெளிப்படையாக பேசிவிட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை எட்டிக் கூட பார்த்துவிட வேண்டாம். ரகசியங்களை கடைபிடிப்பது அவசியம். காசோலை, ஆன்லைன் பரிவர்த்தனையில் கவனம் வேண்டும். உங்கள் வீட்டின் அருகே உள்ள கற்பக விநாயகர், கரிவரத பெருமாள் கோயில் சென்று வழிபடுவது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications