Rasi Palan This Week: துலாம் ராசிக்கு காத்திருக்கும் 2 பிரச்சனைகள் – இந்த தப்பை செய்யாதீங்க
வார ராசி பலன்: அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 முதல் ஐப்பசி 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசி மற்றும் துலாம் லக்னத்தினர் இந்த வாரம் யோக பலன்களை அதிகம் பெறுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். எதிரிகள் விஷயத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பூர்விக சொத்து கைக்கு வரும். இறங்கிய காரியங்களில் எல்லாம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
செல்வாக்கு
உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல உயர்வு காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தாய், தந்தை மற்றும் ரத்த பந்த உறவுகளில் மேன்மை ஏற்படும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் வாக்கு ஸ்தானம் பலமடைய போகிறது. சமூகத்தில் உங்களின் அந்தஸ்து, செல்வாக்கு உயரப் போகிறது. தொழிலில் லாபம் இரண்டு மடங்காக மாறும். எதிர்பார்த்த அனைத்து மாற்றங்களும் நிகழும்.
பிரச்சனைகள்
நரம்பு, முதுகு, பாதம் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் வந்து செல்லும். மன அழுத்தம், வீண் பதற்றம் ஆகியவையும் இருக்கும். உத்யோகத்தில் உடன் பணியாற்றுவோராலும், தொழிலில் உங்களிடம் வேலை செய்யும் பணியாட்கள் மூலமாகவும் பிரச்சனைகள் வந்து செல்லும். எதிலும் பொறுமை அவசியம். ஒப்பந்தம், கையெழுத்து போடுதல் ஆகியவற்றில் அதிக கவனம் வேண்டும். கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்
உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய கூடாது. ஐப்பசி மாதம் வரை உத்யோகத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது புத்திசாலித்தனம். ஐப்பசி முடியும் வரை எல்லாவற்றிலும் நீங்கள் கவனமாக இருப்பது முக்கியம். அனுமன் சாலிசா, நரசிம்மர் கவசம் அதிகளவு கேட்க வேண்டும். நரசிம்மர், ஆஞ்சிநேயர் வழிபாடு பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்றும்.












Click it and Unblock the Notifications