Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. இந்த விஷயத்தை பண்ணுங்க போதும்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

thulam-rasi-palan-what-kind-of-benefits-that-thulam-signs-will-get-from-dec-28-to-jan-4

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு கூடக்கூடிய அற்புதமான காலகட்டம். யோகமும், அனுகூலமும், தைரியமும் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம் படிப்பில் அபிவிருத்தி ஏற்படும். யோகமும், அனுகூலமான சூப்பரான நேரம். இந்த காலகட்டத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தடைபட்டுக் கொண்டே இருந்த இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும்.

உடற்பயிற்சி அவசியம்

தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதையும் தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு சோம்பல், மனஅழுத்தம் ஏற்படும்.

தொழில்

எது செய்தாலும், செய்யாவிட்டாலும் உடற்பயிற்சியை மட்டும் செய்யாமல் இருக்கக் கூடாது. தொழிலில் இருந்த நீண்டநாள் கஷ்டங்கள் படிப்படியாகத் தீரும். யோக பலத்தை அதிகளவில் பெறும் யோகம் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. இதுவரை தடைபட்டுக் கொண்டே இருந்த விஷயங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும். மந்தமாக இருந்த நிலைமைகள் மாறி இனி வேகமெடுக்க ஆரம்பிக்கும்.

மன அழுத்தம் நீங்கும்

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வழிபாடு மன அழுத்தத்தைப் போக்கி நிம்மதியைத் தரும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது நிம்மதியைக் கொடுக்கும். புதன்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பது விரயம், தடைகளை, மன அழுத்தத்தை நீங்கச் செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+