Thulam: துலாம் ராசிக்கு சுக்கிரன் உச்சம்.. அள்ளிக் கொடுக்கும் கிரகம்.. என்ஜாய்
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது.

5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியினருக்கு எல்லா கிரகங்களும் 5 ஆம் இடத்தில் இருப்பதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், ராகு, சனி ஆகிய கிரகங்கள் 5 ஆம் இடத்தில் இருக்கின்றனர். சனி பகவான் இந்த மாதம் 6 ஆம் இடத்துக்கு வருகிறார். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். விரும்பிய பணி கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ் வரும்.
குருவின் அருள்
9 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து பாக்கிய குருவாக வருகிறார். 5 ஆம் பார்வையாக குரு பகவான் உங்களைப் பார்ப்பதால், 7 ஆம் பார்வையாக மூன்றையும், 9 ஆம் பார்வையாக 5 ஆம் இடத்தையும் பார்க்கிறார். நிறைய யோகங்கள் கிடைக்கும் காலகட்டம். ரியல் எஸ்டேட், சிவில், மண் தொடர்பான துறைகளில் ஏற்றம் ஏற்படும்.
வீடு கட்டும் யோகம்
கட்டடங்களைக் கட்ட ஆரம்பிப்பது, வீடு கட்டுவது போன்றவை செய்ய ஏற்ற காலமாக இருக்கும். 12, 9க்கு உடைய குரு பகவான் 5 ஆம் இடத்திற்கும் வருவது கோபுர கலச யோகத்தைக் கொடுக்கும். மன தைரியம் அதிகரிக்கும். மெடிஷன் சம்பந்தப்பட்ட துறை, மருத்துவர்கள், மெடிக்கல் வைத்திருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
கவனம்
புரோக்கரேஜ் கமிஷன்கள் வந்து சேரும். பேச்சாளர்கள், மோட்டிவேட் ஸ்பீக்கர்ஸ் போன்றோருக்கு மிக அற்புதமான நேரமாக இருக்கும். அரசுத் துறை விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் உங்கள் பேச்சாலும், அரசியல் பேசுவதாலும் வருவார்கள் என்பதால் கவனம் தேவை. அரசியல் பேசாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர்களைப் பற்றி வெளியிடத்தில் பேசுவது, கேலி செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்
அப்பாவின் உடல்நிலையில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தந்தையின் பணியில் பாதிப்புகள் வரும். அவரது இருதயம், மூளை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனை வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உங்களைப் பற்றி நிறைய விமர்சனங்கள், கிசுகிசுக்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதைப்பற்றி கவலைப்படவே தேவையில்லை.
வழிபாடு
சுக்கிர பகவான் உச்சம் பெறுகிறார். 8க்கு உரியவர் 6 இல் மறைந்து விபரீத ராஜயோகம் பெறப் போகிறீர்கள். யார் பேசுவதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நன்மையைத் தரும். கார், ஷேர் மார்க்கெட், ஆட்டோ மொபைல் துறைகளில் பெரிய உயரத்துக்குச் செல்லும் யோகம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு. திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்வது, ராகு பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. மிதுன ராசிக்கு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications