Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தொட்டதெல்லாம் துலங்கப் போகுது
Thulam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். ஏற்றங்கள் அதிகளவில் உண்டாகும். வண்டி, வாகனங்களில் ஏற்றம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
வீடு வாங்கும் யோகம்
வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். இன்டீரியர் டெக்கரேஷன் செய்வீர்கள். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நன்மைகள் ஏற்படும். இயற்கை விவசாயம், விவசாயம், கால்நடைகள், பண்ணைகள் தொடர்பான விஷயங்களில் நன்மைகள் நடக்கும்.
நகை சேர்க்கும் யோகம்
எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபடும் யோகம் உண்டாகும். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நினைத்து பார்க்காத விஷயங்கள் எல்லாம் நடக்கும் காலகட்டம். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு, புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும்.
முன்னேற்றம்
மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறும் யோகம் உண்டு. அரசுத் துறை, அரசியல்வாதிகள், படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், மருத்துவர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். விருதுகள் வாங்கும் யோகம் உண்டு. கெளரவங்கள் பெறுவீர்கள். திடீரென ஒரு வீடியோ போட்டு பெரிய ஆளாகும் யோகம் உண்டு. திறமைகள் வெளிப்படக்கூடிய காலகட்டம்.
வழிபாடு
தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வது நன்மை பயக்கும். முதுகுத் தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. நவக்கிரகத்தில் ராகு வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வயிறு பாதித்தால் மன அழுத்தம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications