This Week Rasi Palan: துலாம் ராசிக்கு அடிச்ச ஜாக்பாட்.. கரன்ஸி நோட்டுகளை கட்டுகட்டாக அள்ளும் யோகம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

thulam-weekly-rasi-palan-what-kind-of-benefits-kanni-virgo-people-will-get-from-september-21-to-2

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வாரத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. செப்டம்பர் 22, புரட்டாசி 6 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரைக்கு வழிபாடு செய்யப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் விலை உயர்ந்த பொருள்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நியாபக மறதி ஏற்படும் என்பதால் எல்லா விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. பெற்றோர், பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சுப காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அடுத்தடுத்து சுப காரியங்கள் எல்லாம் நடக்கும் அற்புதமான நேரமாக இருக்கும்.

அனுகூலம்

தைரியத்துடன் முன்னோக்கிச் செல்வீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், படிப்பு, வியாபாரத்தில் நல்ல அனுகூலமும், முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எல்லா விதத்திலும் துலாம் ராசியினர் இருக்கம் வீடுகளில் அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும்.

யோக பலன்

எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு. யோக பலன்களை அதிகளவில் பெறக்கூடிய ராசிகளில் துலாம் ராசியினரும் ஒன்று. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் தீரும். குடும்பத்தில் மிகப்பெரிய ஏற்றமும், பணவரவும் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

முன்னேற்றம்

குடும்பத்தில் ஏற்றம் ஏற்படும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் ஏற்படாது. இனி நல்ல அந்தஸ்தான தொழில்களைச் செய்யும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாகவும், அக்கறை செலுத்துவதும் நல்லது. ரத்த அழுத்தம், தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு மயக்கம், தலைச்சுற்றல், ஹர்மோன் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

வழிபாடு

புதன்கிழமை மதிய வேளைகளில் ஏழை எளியோருக்கு சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். ஏற்படும் விரையங்கள் அனைத்தும் சுப விரையங்களாக மாறும். செவ்வாய்க்கிழமையில் தேவி வழிபாடு, அம்பாள் வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+