Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அடிச்ச ஜாக்பாட்.. இனி தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது
வார ராசி பலன்: ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அதிக அளவிலான நல்ல பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். லாபமும், சந்தோஷமும், அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் காணப்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உத்தியோகத்தில் அனுகூலம் காணப்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் தடைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
பதவி உயர்வு
இதுவரை இழுபறியாக இருந்து வந்த அனைத்து விஷயங்களும் இனி டக்கு டக்கென்று நடக்கும். தடைகள் அனைத்தையும் தகர்த்தெறியும் காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் பெரிய சந்தோஷமும், நம்பிக்கையும் ஏற்படும். நம்பிக்கையோடு எடுக்கக்கூடிய அனைத்து காரியங்களிலும் சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் தனிப்பட்ட முறையில் பெரிய பொறுப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
சுபகாரியங்கள்
குடும்பத்தில் சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உள்ளது. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கான யோகம் உண்டு. வீட்டில் உங்களுக்குப் பிடித்தமான இன்டீரியர் டெக்கரேஷன்களை செய்வீர்கள். லாபத்தின் அளவு பன்மடங்காக உயரும்.
பாதிப்புகள் நீங்கும்
வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் ஏற்படும். வேலை, தொழில், உத்தியோகத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். தொழில் ஏற்றம், உத்தியோக ஏற்றம், வியாபார ஏற்றம், படிப்பு ஏற்றங்கள் பெறும் காலகட்டமாக இருக்கும். வயிறு, அலர்ஜி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு ஏற்றற்தை தரும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடல்களை கேட்பது, படிப்பது நன்மை பயக்கும். இதன் மூலம் குழந்தைகள் விஷயத்தில் இருக்கக்கூடிய மன கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். சுப்பிரமணிய புஜங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications