Rasi Palan This Week: தடைகளை தவிடுபொடியாக்கும் துலாம் ராசி.. தொட்டதெல்லாம் தூள் பறக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஆடி 18 ஆம் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Thulam Lucky zodiac signs

அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். உத்யோகம், தொழில், வியாபாரம், கல்வி ஆகிய அனைத்திலும் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது அற்புதமான காலகட்டம். உத்யோகத்தில் இருந்து விலகி புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது.

லாபம்

தாய் வழி உறவு மேம்படும். கடந்த காலங்களில் தொழில் ஏராளமான கஷ்டம், பின்னடைவை சந்தித்தவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை மாற்ற கூடியளவுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான அஸ்திவாரத்தை இப்போதே போட்டுவிடுவீர்கள். முதலீடுகளில் லாபம் நன்றாக இருக்கும்.

மகிழ்ச்சி

வீடு, நிலம் போன்ற மண் சார்ந்த முதலீடுகளில் மிகப்பெரிய ஏற்றம் காணப்படும். அசையும், அசையா சொத்துகள் வந்து சேரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவடையும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

வெற்றி

இழுபறியாக இருந்த நிலை மாறி, இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த தடைகள் விலகி பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற புதிய பொறுப்புகள் தேடி வரும். அரசு மற்றும் அரசியல் துறைகளில் இருப்போருக்கு இந்த வாரம் மிகவும் பிரமாதமாக இருக்கும்.

மாற்றங்கள்

புதிய கடன்கள் வந்து சேரும். தொழிலும் எதிர்பாராதளவுக்கு சிறப்பான ஏற்றம் உண்டாகும். உங்களின் ஆளுமைப்பண்பு சிறப்பாக வெளிப்படும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கை, பாராட்டை பெறுவீர்கள். தொழிலில் உங்கள் பணியாளர்கள் மூலம் நல்ல பலன் அடைவீர்கள். கல்வியில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும்.

பரிகாரம்

இந்த வாரம் எல்லாவற்றிலும் உங்களுக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும். நீங்கள் பெரிதாக மெனக் கெடாத காரியங்களில் கூட வெற்றி வரும். அபிராமி அந்தாதியின் 50வது மற்றும் 75வது பாடல்களை வாசிப்பது மிகவும் நல்லது. சனிக்கிழமை நாள்களில் பெருமாள் மற்றும் ஆஞ்சிநேயரை வழிபடுவது சிறப்பான உயர்வை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+