ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்.. பக்தர்களுக்கு 6 மணி நேரம் அனுமதி இல்லை.. எப்போது தெரியுமா
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமஞ்சனம் என்படும் தூய்மைப்பணிகள் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் 6 மணி நேரம் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் இருக்கிறார். ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த கோவிலுக்கு ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருப்பதி ஏழுலையான் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும். விடுமுறை நாட்களிலும் முக்கிய நாட்களிலும் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் பயணிகள் மணிக்கணக்கில் கத்துக் கிடந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டியிருக்கும்.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 4 விழாக்களை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி யுகாதி பண்டிகை மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது. இதன் காரணமாக 2-ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக கோயிலில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளி இருக்கும் மூலவர் விக்ரகம் வெண்மையான வஸ்திரத்தால் முழுமையாக போர்த்தப்படும். இதையடுத்து, ஆனந்த நிலையத்தில் இருந்து தங்கவாசல் வரையிலும், கோயிலில் உள்ள துணை சன்னதிகள், கோயில் வளாகம் பூஜை பொருட்கள் போன்றவை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்படும்.
இந்த தூய்மைப்பணி முடிந்த பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை மற்றும் பிற வாசனை பொருட்கள் கலந்த புனிதநீர் கோயில் முழுவதும் தெளிக்கப்படும்.
இந்தப் பணிகள் முடிந்த பிறகு மூலவர் விக்ரகம் மீது போர்த்தப்பட்டு இருக்கும் வெண்மையான வஸ்திரத்தை அகற்றி வீட்டு சாஸ்திர முறைப்படி அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நைவேத்தியம் சமர்பித்து மதியம் 12 மணிக்கு பக்தர்களை அனுமதிப்பார்கள் இதன் காரணமாக வரும் ஏப்ரல் 2 ஆம் தெதி 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications