144 ஆண்டுகளுக்குப் பின்.. திரிவேணி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினர் யார் தெரியுமா?
தை அமாவாசை நாள் மெளனி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மூதாதையர்களுக்கு மக்கள் புனித நீராடி தர்ப்பணம் அளிப்பது வழக்கம். இதன் மூலமாக முன்னோர் ஆசி முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் மெளனி அமாவாசை தினமான இன்று 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திரிவேணி யோகம் உருவாகியுள்ளது.
சூரியன், புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் மகர ராசியில் இணையவுள்ளனர். இந்த மூன்று கிரகங்களின் ஐந்தாவது, ஒன்பதாவது யோகங்கள் வியாழனுடன் உருவாவதால் திரிவேணி யோகம் உருவாகியுள்ளது. இந்த திரிவேணி யோகத்தால் 5 ராசிக்காரர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தைக் காணப் போகின்றனர். அந்த அதிர்ஷ்டக்கார 5 ராசியினர் யார் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்: மௌனி அமாவாசை அன்று உருவாகும் திரிவேணி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் காலமாக இருக்கும். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிகள் பிறக்கும். பூர்வீக சொத்துகளால் ஆதாயமடைவீர்கள். வேலை செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நேரமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய துறையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமண வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
மகரம்: திரிவேணி யோகத்தால் மகர ராசியினருக்கு நற்பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் காலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமுதாயத்தில் மகர ராசியினருக்கான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் மிகுந்த காலமாக இருக்கும். வியாபாரிகள், தொழில் செய்பவர்களுக்கு சிறந்த காலமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் வந்து சேரும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு திரிவேணி யோகம் ஏழாவது வீட்டில் அமைவதால் திருமண வாழ்க்கையில் அன்பு பெருகும், மகிழ்ச்சி அதிகரிக்கும். மத குருக்கள், ஆன்மிகத்தில் உள்ளவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் விஷயங்கள் உங்களுக்கு நல்ல ஆதாயத்தைக் கொடுக்கும். இந்தப் பயணங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை் கொடுக்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் திரிவேணி யோகம் அமையவுள்ளதால் நல்ல பலன்களைப் பெறப் போகின்றனர். குழந்தை பாக்கியத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். குழந்தைகளால் பெற்றோரும், பெற்றோரால் குழந்தைகளும் மகிழ்ச்சி அடையும் காலமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். நல்ல வாழ்க்கை துணை கிடைப்பதற்கான யோகம் உண்டு. செல்வ செழிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு திரிவேணி யோகத்தால் செல்வ வளம் பெருகும். பண வரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்துடன் புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிட்டும். இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications