கன்னி ராசிக்கு ஜாக்பாட்.. யோக பலம் கொட்டப் போகுது.. பணமழையில் நீச்சல் அடிக்க போறீங்க
வைகாசி மாத ராசி பலன்: சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நரசிம்மர் வழிபாடு மிக மிக முக்கியம். மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது நல்லது. வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது பாதிப்புகளில் இருந்து நிவர்த்தியை ஏற்படுத்தித் தரும். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் என்று பல்வேறு விதமான மாற்றங்களைப் பெறுவீர்கள். பெரிய சந்தோஷத்தையும், பெரும் அனுகூலத்தையும் பெறுவீர்கள்.
பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளுமே வெற்றியடையும். தேக ஆரோக்கியத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். சிறிய பிரச்சனை கூட பெரிய பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது. வண்டி, வாகனத்தில் வித்தை காட்டாமல் இருப்பது மிக மிக முக்கியம். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு அற்புதமான அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
மீடியா துறையில் இருப்பவர்களுக்கு திடீர் பணம், திடீர் அனுகூலம் உண்டாகும். பெரிய அளவுக்கு வசந்தத்தையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். பதவி உயர்வு பெற்றவர்கள் மேலதிகாரிகளுடன் தர்க்கம் செய்யாமல், நல்ல நாள் கெட்டநாள் பார்க்காமல் அந்தப் பதவியில் அமருவது மிக மிக முக்கியம். தள்ளிப் போடுவது சிக்கல்களை உண்டாக்குவதற்கான வாய்ப்புள்ளது.
அஷ்டமி, நவமி என எந்த தினத்தில் பதவி உயர்வு கிடைத்தாலும் அந்தப் பதவியை உடனடியாக ஏற்றுக் கொண்டு அமருவது பல்வேறு விதமான நன்மைகளைத் தரும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும், திருமண தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த நிம்மதியற்ற தன்மைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். மாற்றம், முன்னேற்றத்தை தரும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications