மிதுன ராசிக்கு தொழில் தொடங்க சூப்பர் சான்ஸ்.. நகை, பணம் விஷயத்தில் தான் பிரச்சனையே
வைகாசி மாத ராசி பலன்: சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அலர்ஜி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். பெருமாள் வழிபாடு, கோவிந்த நாமங்களைச் சொல்வது, நாராயணியத்தில் 100 வது தசாங்கத்தை கேட்பது எல்லாம் உங்களைக் காப்பாற்றும். எலும்புகள், விட்டமின் குறைபாடுகள் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விரையங்கள் அதிகமாக இருப்பதால் விலையுயர்ந்த பொருள்களை கையாளக் கூடிய மிதுன ராசிக்காரர்கள் மிகுந்த மிக கவனத்துடன் இருப்பது நன்மையான சூழலையும், சந்தோஷமான அமைப்பையும் ஏற்படுத்தி தரும்.
பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எந்தவித மாற்றங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், தொழில் மாற்றம் என்ற மாற்றமெல்லாம் பெரிய பலத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
உங்களுக்கு திடீர் தொழில் மாற்றங்கள் பெரிய வெற்றியை ஏற்படுத்தி தரும். கூட்டுத்தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்கள் தைரியமாகத் தொடங்கலாம். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகூடக் கூடிய அற்புதமான காலகட்டம், வியாபாரத்தில் காணப்பட்டு வந்த பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும்.
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடுவது கண் கூடாகப் பார்க்கலாம். தொழில் ரீதியாக பெரியவர்கள் ஆசிர்வாதம், மகான்களின் ஆசிர்வாதம் உண்டாகும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளில் நிவர்த்தி ஏற்படுத்திக் கொள்வீர்கள். குலதெய்வத்திற்கு உண்டான அனுகூலம் ஏற்படும். ஆன்மீகம், தெய்வீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
தங்கம், வெள்ளி, பணத்தைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். விரையங்கள் அதிக அளவில் ஏற்படும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications