Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விநாயகர் சதுர்த்தி பூஜையில் தப்பித்தவறி கூட துளசி பயன்படுத்தாதீங்க..ஆன்மீக காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: விநாயகருக்கு எளிமையான அருகம்புல்லும் எருக்கம் பூ மாலையும் பிடித்தமானது. அதே நேரத்தில் துளசியை தப்பித்தவறி விநாயகர் பூஜைக்கு பயன்படுத்தி விடக்கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதற்கான புராண கதையும் சொல்லப்பட்டுள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நேரத்தில் துளசியை ஏன் விநாயகர் பூஜையில் பயன்படுத்தக்கூடாது என்று பார்க்கலாம்.

வினைதீர்க்கும் விநாயகரை வணங்கினால் எந்த சாபமாக இருந்தாலும் விலகிவிடும் என்று கூறுவார்கள். ஆனால் அந்த விநாயகரே ஒருவருக்கு சாபமிட்ட சம்பவம் உள்ளது. அதுவும் அவரை விரும்பிய பெண்ணுக்கே விநாயகர் சாபமிட்டார். விநாயகர் ஏன் தன்னை விரும்பிய பெண்ணுக்கே சாபம் கொடுத்தார்? யார் அந்த பெண்? விநாயகர் கொடுத்த சாபத்தின் விளைவு என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்து புராணங்கள் முழுவதுமே நிறைய காதல் கதைகள் உள்ளது. சிவன் - பார்வதி, விஷ்ணு - லக்ஷ்மி, இராமன் - சீதை, முருகன் - வள்ளி என தெய்வீக காதல் கதையைப் பற்றி பலரும் படித்திருப்போம். தோல்வியடைந்த காதல்களும் புராணங்களில் இருக்கிறது. விநாயகரை விரும்பிய துளசியின் காதல்கதை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதைப்பற்றி பார்க்கலாம்.

துளசி தேவி

துளசி தேவி

துளசி மரணத்தின் கடவுளான எமதர்மனின் மகள் ஆவார். அவர் தன் இளம் வயதில் விஷ்ணுவின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் தினமும் கங்கை நதிக்கரையில் உள்ள விஷ்ணுவின் கோவிலுக்கு சென்று நதியில் நீராடிவிட்டு விஷ்ணுவை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவ்வாறு தினமும் செய்துகொண்டிருந்த போது ஒரு நாள் கங்கையின் மறுகரையில் ஒருவர் தியானத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்தார். அவரின் தேஜஸை கண்டு மயங்கிய துளசி அவர் மேல் காதலில் விழுந்தார். அந்த தியானத்தில் இருந்தவர் வேறு யாருமல்ல விநாயகர்தான்.

 விநாயகர் மீது காதல்

விநாயகர் மீது காதல்

தியானத்தின் போது அவர் எழுப்பிய ஒலி அவரின் வசீகரத்தை மேலும் அதிகரித்தது. இதனால் அவரிடம் சென்று தன் காதலை வெளிப்படுத்த எண்ணினார். அதனை நிறைவேற்றவும் செய்தார். உடனடியாக பிள்ளையாரிடம் சென்று தன்னை மணந்துகொள்ளும்படி கேட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிள்ளையார் அமைதியாக துளசியின் காதலுக்கும், திருமணம் பற்றிய வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவித்தார். துளசி அதற்கு காரணம் கேட்டபோது தான் தன் தந்தை சிவபெருமானுக்கு எப்படி பார்வதி தேவி சிறந்த துணையாக இருக்கிறாரோ அதேபோல தானும் தனக்கு தன் அன்னையை போல இருக்கும் பொருத்தமான பெண்ணையே திருமணம் செய்துகொள்ள இயலும் என்று கூறினார்.

 விநாயகர் சாபம்

விநாயகர் சாபம்

விநாயகரின் இந்த பதில் துளசியின் கோபத்தை அதிகரித்தது, இதை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதினார். தன் உணர்ச்சிகளை மதிக்காத பிள்ளையாரை அதற்காக தண்டிக்க எண்ணினார். எனவே பிள்ளையாருக்கு சாபமிட துணிந்தார். தன் காதலை மதிக்காத பிள்ளையாருக்கு வருங்காலத்தில் அவர் எண்ணங்களுக்கு எதிராகவே திருமணம் நடக்க வேண்டும் என்று சாபமிட்டார். அதுவரை பொறுமைகாத்த பிள்ளையார் துளசியின் சாபத்தால் கோபமுற்றார். எனவே வருங்காலத்தில் நீ ஒரு அசுரனைத்தான் திருமணம் செய்துகொள்வாய் என்று துளசிக்கு சாபமிட்டார்.

 தவறை உணர்ந்த துளசி

தவறை உணர்ந்த துளசி

விநாயகர் அளித்த சாபத்தின் விபரீதத்தை உணர்ந்த துளசி தான் செய்த தவறை உணர்ந்தார். உடனடியாக தன் தவறை உணர்ந்த துளசி விநாயகரிடம் மன்னிக்கும்படி கெஞ்சினார். துளசி கண்ணீர்விட்டு கெஞ்சுவதை பார்த்த விநாயகர் மனமிறங்கினார். விநாயகர் அளித்த சாபத்தின் விபரீதத்தை உணர்ந்த துளசி தான் செய்த தவறை உணர்ந்தார்.

வரம் கொடுத்த விநாயகர்

வரம் கொடுத்த விநாயகர்

உடனடியாக தன் தவறை உணர்ந்த துளசி விநாயகரிடம் மன்னிக்கும்படி கெஞ்சினார். துளசி கண்ணீர்விட்டு கெஞ்சுவதை பார்த்த விநாயகர் மனமிறங்கினார். விநாயகர் அளித்த சாபத்தின் விபரீதத்தை உணர்ந்த துளசி தான் செய்த தவறை உணர்ந்தார்.

என் பூஜைக்கு துளசி கூடாது

என் பூஜைக்கு துளசி கூடாது

பிள்ளையார் தான் அளித்த சாபத்தையே வரமாக மாற்றினார். அதன்படி விஷ்ணுவின் அருளால் துளசி புனிதமான துளசி செடியாக மறுபிறப்பு எடுப்பாய் எனவும், விஷ்ணுவை உன்னை கொண்டு பூஜிப்பார்கள் எனவும் கூறினார். ஆனாலும் நீ என்னிடம் இருந்து எப்போதும் விலகிதான் இருப்பாய் என்னை உன்னை கொண்டு பூஜிக்கக்கூடாது என்று கூறினார். விநாயகர் கொடுத்த சாபம் பலித்தது, அதன்படி துளசி அரக்கர்களின் மன்னனான ஜலந்தரனையே மணக்க நேரிட்டது. அரக்கனான அவன் செய்த தவறுகளுக்குகாக பின்னாளில் அவனை சிவபெருமானால் வதைக்கப்பட்டான். அதன்பின் தானும் இறந்த துளசி விநாயகர் கூறியது போலவே புனிதமான துளசி செடியாக பிறந்தார். இன்றைக்கும் விநாயகர் பூஜைக்கு துளசியை பயன்படுத்தாமல் உள்ளதன் காரணம் இதுதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+