Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு சுக்கிரனால் அடிக்கும் ஜாக்பாட்.. எல்லாமே இனிமே ஹிட்டுதான்
Viruchigam Rasi Palan: ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எல்லா விஷயங்களிலும் வெற்றி ஏற்படும். முதுகுத் தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில், வயிறு சார்ந்த பிரச்சனைகள், கழுத்து சுழுக்கு போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பதவி உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரக்கூடிய யோகம் உண்டாகும். கெளரவம் ஏற்படும்.
பணவரவு
அரசு விருதுகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அரவணைப்பு கிடைக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது போன்ற நல்லவை நடக்கும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடந்து அற்புதத்தை ஏற்படுத்தும். எளிமையாக நல்ல விஷயங்கள் நடக்கும். முன்னேற்றங்கள் நிறைந்த காலகட்டம்.
சுக்கிரன் பார்வை
சுக்கிரனுடைய பார்வை பலம் இருப்பதால் வெற்றி ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகங்களால் வெற்றி ஏற்படும். வேலை பிடிக்கவில்லை, நேரம் சரியில்லை என்று எல்லாமே நன்றாக இருந்தாலும் எதுவுமே சரியில்லை என்கிற மனநிலை இருக்கும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், சுமைகள் வந்தாலும் தாங்கக்கூடிய மனிதர்களாக இருப்பீர்கள்.
தடை நீங்கும்
பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். படிப்புத் தடை நீங்கும். புதிய உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு யோக பலன்கள் கிடைக்கும். புதிதாக இருக்கும் தடைகள் எல்லாம் தவிடு பொடியாகும். செல்வந்தர்களாகவும், பெயர் புகழ் உடையவர்களாகவும் உங்களை மாற்றும்.
வழிபாடு
பாசிட்டிவாக சிந்திப்பது உங்களுக்கு ஏற்றத்தைத் தரும். ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் நன்றாக இருக்கும். மனசாட்சியுடன் நடந்து கொள்வது நல்லது. சநதோஷமும், பொருளாதாரமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். நவக்கிரகங்களில் உள்ள சனி பகவானை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். அபிராமி அந்தாதியில் 40, 59, 75, 90 ஆவது பாடல்களைப் படிப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications