Rasi Palan This Week: அட விருச்சிக ராசிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா.. அடியோடு மாறும் வாழ்க்கை
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமாக இருக்கும். நீங்கள் இறங்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி குவியும். உத்யோகம், தொழிலில் சிறப்பான மாற்றங்கள், முன்னேற்றம் ஏற்படும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் இருந்த மனக்கவலைகள் நீங்கி அவர்களால் நீங்கள் மகிழ்ச்சியடையும் வாரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சாதனைகள்
உத்யோகத்தில் உங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் லாபம் நன்றாக இருக்கும். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு பெயர் புகழ் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலை, ஊடகம், மருத்துவத்துறையில் இருப்போர் சாதனைகள் படைக்கும் அற்புதமான காலம். நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்களை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் இருந்து விலகி சுயமாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்டங்கள்
மனபாரம் குறைந்து நிம்மதி பிறக்கும். உத்யோகம், தொழிலில் இருந்த பிரச்சனைகள் விலகி அடுத்தடுத்து நல்லதுகள் நடைபெறும். இழுபறியாக இருந்த காரியங்கள் மாறும். பயணங்களால் ஆதாயம் உண்டு. திடீர் அதிர்ஷ்டங்கள், திடீர் பண வரவு உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் சொல் கேட்டு நடப்பது பிரம்மாண்டமான வெற்றியை கொடுக்கும்.
கவனம்.. பரிகாரம்
ரத்த பந்த உறவுகளுடன் மோதல் போக்கை தவிர்க்க வேண்டும். தாய், தந்தை வழி உறவில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வீண் விவாதங்கள், முன் கோபம் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகே உள்ள சிவன் கோயில் சென்று மனதார வழிபடுவதும், காகத்திற்கு தினசரி உணவு வைப்பதும் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications