Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. 7 நாட்களில் நடக்கும் அற்புதமான மாற்றம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் அபிவிருத்தி ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தேர்வு, அரியர் போன்ற விஷயங்களில் மாணவர்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறுவீர்கள்.
வீடு கட்டும் யோகம்
போட்டித் தேர்வுகளை எழுதியவர்கள் டக்கென்று நல்ல பொறுப்புகள், பதவிகளுக்கு வருவீர்கள். நேர்காணலில் தேர்வு செய்யப்படுவீர்கள். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, மண் வாங்குவது போன்ற யோகங்கள் ஏற்படும். வீட்டில் இன்டீரியர் டெக்கரேட் செய்து மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்காக காத்திருப்பவர்கள் வீடு கட்டி முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அனுகூலமும் பெருகும்.
சிக்கல்கள் தீரும்
வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். திட்டமிட்டு செய்யக்கூடிய அனைத்து விஷயங்களிலும் மிகப்பெரிய சந்தோஷமும், நம்பிக்கையும் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது.
தொழிலில் மேன்மை
அபிராமி அந்தாதியைப் படித்து வருவது பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்த மனக் கசப்புகளை நீங்கச் செய்யும். பிள்ளைகளின் கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 49, 50, 75 ஆவது பாடல்களை படிப்பது கேட்பது மேன்மையை ஏற்படுத்தும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தும்.
பிரச்சனைகள் தீரும்
புதிய முதலீடுகள் பெரிய மகிழ்ச்சியையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படுவது மனதில் புதிய தெளிவை ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் குடும்பத்திலும், சமுதாயத்திலும் செல்வாக்கு அதிகரிக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு இருந்த மனக் கஷ்டங்கள் நீங்கும். என்னவென்றே தெரியாத பிரச்சனைகள் அனைத்தும் தீரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
முருகன் வழிபாடு
மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். உங்கள் உரிமைகளை கேட்டுப் பெறுவது வெற்றியைக் கொடுக்கும். முருகன் வழிபாடு உங்களுக்கு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications