This Week Rasi Palan: விருச்சிக ராசிக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் – லைப்டைம் செட்டில்மென்ட்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

viruchigam-weekly-rasi-palan-viruchigam-scorpio-people-will-get-good-benefits-from-september-21-t

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வாரத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. செப்டம்பர் 22, புரட்டாசி 6 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரைக்கு வழிபாடு செய்யப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உத்யோகம், தொழிலில் இரண்டிலும் நல்ல பலன்கள் கிடைக்கும் உத்யோகத்தில் ஏற்றம் காணப்படும். தொழிலில் லாபம் அதிகமாகும். முதலீடுகளில் லாபம் சிறப்பாக இருக்கும். சொந்த வீடு, நிலம், வண்டி, வாகனம், ஆபரணங்கள் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.

செல்வாக்கு

சுப காரிய தடை தடைகள் விலகும். திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட காரியங்களில் அடுத்தடுத்து வீடு தேடி நல்ல செய்தி வரும். உங்களின் வாக்கு ஸ்தானம் பலமடைகிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி எல்லா இடங்களிலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

முதலீடு

மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். எதிர்பார்த்த காரியங்களுடன், நீங்கள் எதிர்பார்க்காத காரியங்களும் நடைபெறும். உத்யோகம், தொழிலில், வியாபாரம், கல்வி ஆகியவற்றில் இருந்த தடைகள் முழுமையாக விலகும். உங்களின் முயற்சிகளுக்கு கை மேல் பலன் கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்த குழப்ப நிலை விலகும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அரசு கௌரவம்

இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி குவியும். உத்யோகத்தில் இதுநாள் வரை தடைபட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு, இட மாற்றம் போன்றவை நிகழும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு புதிய உத்யோகம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு அரசு கௌரவம் தேடி வரும்.

கவனம்

தோல், காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்போர் அதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வாகனங்கள் ஓட்டும்போது கவனம் வேண்டும். எதிலும் நேர்மறையாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வெள்ளிக்கிழமை நாளில் அம்மன் வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+