Rasi Palan This Week: விருச்சிகம் ராசிக்கு நிழல் போல சுற்றும் பகை.. யாரையும் நம்பிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஆடி 18 ஆம் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Viruchigam Lucky zodiac signs

அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பிரமாதமாக இருக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் அற்புதமான மாற்றம், ஏற்றமும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் இருந்த சிக்கல் தீர்ந்து பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

அனுகூலம்

உத்யோகம், தொழில், கல்வி ஆகியவற்றில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். அனைத்து வழிகளிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்யோகம், தொழிலில் ஏற்றம் உண்டாகி, சமூகத்தில் உங்களுக்கு தனி செல்வாக்கு ஏற்படும். மிகப்பெரிய அணுகூலம் ஏற்படும். வீடு, நிலம் போன்ற கனவுகள் நனவாகும். வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும்.

செல்வாக்கு

தாய், தந்தை வழி உறவு மேம்பாடு அடையும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், மனக்கவலைகள் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுப காரிய செலவுகள் ஏற்படும். தடைபட்ட சுப காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். சமூகத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

தடைகள்

பெரியவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். தொழிலில் மிகவும் கவனம் வேண்டும். உடன் இருப்போரே உங்களுக்கு எதிராக குழி பறிப்பார்கள். யாரையும் நம்பி எதிலும் இறங்க வேண்டாம். காரியங்களில் அவ்வபோது சின்ன சின்ன தடைகள் வந்து செல்லும். அதை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். புதிய நபர்களை நம்பி எதையும் செய்துவிட வேண்டாம்.

பரிகாரம்

ரகசியங்களை காப்பது மிகவும் அவசியம். பயணங்களின் போது மிகுந்த கவனம் வேண்டும். ரத்தபந்த உறவுகளுடன் மோதல் போக்கை தவிர்க்கவும். சனிக்கிழமை தினங்களில் வீட்டு அருகில் உள்ள பெருமாள் கோயில் சென்று வழிபடுவது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும். முடிந்தால் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் செல்வது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+