வார ராசி பலன்: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு அடிச்ச ஜாக்பாட்.. பலன்கள், பரிகாரங்கள்?.. முழு விவரம்
வார ராசி பலன்: பங்குனி மாதம் ஆரம்பிக்கிறது. மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பங்குனி மாதம் நடைபெறவுள்ளது. அந்த வகையில், மார்ச் மாதத்தில் இன்று முதல் 16 ஆம் தேதி வரை மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார்.

மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகர ராசி: ஜெயம், அனுகூலம், அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் தைரியம் உண்டாகும். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருப்பீர்கள். அவை அனைத்தும் படிப்படியாக மாறும், நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்களுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் இருந்த பாதிப்புகளில் நிவர்த்தி ஏற்படும். கோபதாபங்களை தவிர்ப்பது நன்மைகளை ஏற்படுத்தும்.
புதன்கிழமை தோறும் பசு மாட்டிற்கு உணவளிப்பதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள். இது உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். சுபவிரய பிராப்தம் திடீரென கைகூடும். பங்குனி மாதம் என்று யோசித்துக் கொண்டே இருக்காமல், அசையும், அசையா சொத்துகளை வாங்குவது ஆனந்தத்தை ஏற்படுத்தி தரும். முதலீடு அதிக அளவில் செய்யக்கூடிய ராசிக்காரர்களில் மகர ராசிக்காரர்கள் முதன்மையானவர்கள்.
பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் பெரிய அளவில் நம்பிக்கை ஏற்படும். கலை, படைப்பாளிகள், மீடியா துறை, மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலம், ஏற்றம் ஏற்படும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உள்ளூர் வெளியூர் பயணங்கள் வந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
கும்ப ராசி: வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். புதுக் கடன் பெறக்கூடிய யோகம் ஏற்படும். எல்லா காரியங்களிலும் ஏற்றம் ஏற்படும். நீங்கள் வாங்கும் கடன் சந்தோஷ கடனாக இருக்கும். முதலீடுகளுக்கான அமைப்பு ஏற்படும். சூது விஷயங்களில் சிக்காமல் இருப்பது நல்லது. பழைய பகையாளிகளிடம் மன வருத்தங்களை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொழில் ரீதியாக இருந்த பாதிப்புகள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். உத்தரவாதத்துடன் எடுக்கக்கூடிய முடிவுகள் பலரால் பாராட்டப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். சுப விரைய பிராப்தம் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவாக இருந்தாலும் அது சந்தோஷ செலவாக இருக்கும். பூர்வீகத்தில் இருந்த பாதிப்புகளில் நிவர்த்தி ஏற்படும். பூர்வீக இடங்களுக்குப் போனால் தங்குவதற்கான வீடு கட்டலாம் என நினைத்திருப்பீர்கள். அதற்கான முடிவுகளை எடுக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும்.
பிள்ளைகளுடன் இருந்த பாதிப்புகளில் நிவர்த்தி ஏற்படும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. எல்லாவிதத்திலும் நம்பிக்கை ஏற்படும். சோம்பல் அமைப்பில் இருந்து நிவர்த்தி ஏற்படும். சாதகமான காலகட்டமாக இருக்கும். இழுபறியான சிக்கல்கள் அனைத்தும் தீரும்.
மீன ராசி: உங்கள் ராசியில் பங்குனி மாதம் பிறப்பதால் சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கையெழுத்திடுவதற்கு முன்பாக யோசித்து கையெழுத்திட வேண்டும். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம். யாருக்கும் ஆலோசனை செய்யக் கூடாது. கணவன், மனைவி உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும்.
தூக்கம் மிகவும் முக்கியம். பதவி உயர்வு, மேலதிகாரிகள், உத்தியோகத்தை ராஜினாமா செய்வேன் என சவால்விடுவதை தவிர்ப்பது நல்லது. இனிமையாகப் பேசுவது நன்மை பயக்கும். வீணாக யாரிடத்திலும் பகையை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பது நல்லது. அசையும், அசையா பொருள் சேர்க்கை லாபம், அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். சுப காரியங்கள் நடக்கும். லாபம் ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான பொருள் சேர்க்கை அனுகூலத்தை தரும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மே ஏற்படும்.
தங்க நகை, வைர நகை வாங்கும் யோகம் உண்டாகும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை நிவர்த்தி செய்வது கொள்வது நல்லது. அனுமன் வழிபாடு, அனுமன் சாலிஷா, அனுமன் காயத்ரி, ராகவேந்திர மந்திரத்தை உற்சரிப்பது நல்ல பலன்களைத் தரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். வேற்று மொழி மனிதர்களால் நன்மை உண்டாகும். கடல் கடந்து இருப்பவர்கள் வீடு, நிலம் வாங்கும் அமைப்பு உண்டாகும்.












Click it and Unblock the Notifications