வார ராசி பலன்: கும்பம், மீனம் ராசிக்கு அதிர்ஷ்டமா?.. துரதிர்ஷ்டமா?.. முழு விவரம் இதோ!
வார ராசி பலன்: பங்குனி மாதத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் மாதத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார். மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் - பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். தொழிலில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றிகளை குவிக்கும் காலமாக இருக்கும். வேற்று மொழி பேசும் மனிதர்களால் சிறந்த யோகங்களை பெறப் போகும் காலம். உத்யோகத்தில் நல்ல உயர்வு உண்டு. உங்கள் உயரதிகாரிகளின் நம்பிக்கை மற்றும் பாராட்டை பெறுவீர்கள். பணியில் பொறுப்புகள் கூடும்.
நீண்ட காலமாக இருக்கும் தடைகள் ஒவ்வொன்றாக நீங்கும். நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த தொடங்கும் காலமாக இதுவாக இருக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சுப காரியங்களுக்கான அறிகுறிகள் தென்படும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். வாழ்க்கை துணையுடன் இணக்கமான சூழல் ஏற்படும்.
ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. காது, மூக்கு, தொண்டை, சளி, ஒவ்வாமை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். வீண் பதற்றத்தை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எதிர் பாலினர் விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.
நவ கிரகத்தில் உள்ள புதன் பகவான் வழிபாடு நல்ல பலன்களை கொடுக்கும். அருகில் உள்ள விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து தரிசனம் செய்வதால் காரிய தடைகள் நீங்கும்.
மீனம் - மனதில் தெளிவு பிறக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொடர்ச்சியாக இருந்த பல பிரச்னைகள் நீங்கும். மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். மருத்துவ செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல ஏற்றம் கிடைக்கும். தடைகள் நிவர்த்தியாகும்.
மனதுக்கு நிம்மதி கிடைக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஜென்மத்தில் சனி பகவான் வரும் காலம். வீண் பதற்றம் அவசியமில்லை. பயணங்களால் ஆதாயம் உண்டு. கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும்.
வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அந்நியர்களின் தலையீடு கூடாது. வாகனத்தில் மிகுந்த எச்சரிக்கையுடக் இருப்பது அவசியம். உத்யோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சட்ட விரோத நபர்களுடன் பழகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நவ கிரகத்தில் சந்திரன் மற்றும் சூரியன் பகவான் வழிபாடு நடத்துவதால் நன்மைகள் நடக்கும்.
-
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications