துலாம், விருச்சிகம் ராசிகள் இந்த 2 விஷயத்தை தெரியாம கூட பண்ணிடாதீங்க.. கவனம்.. கவனம்
வார ராசி பலன்: பங்குனி மாதத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
வார ராசி பலன்
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். அதன்படி கடந்த மார்ச் 29 ஆம் தேதி ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த வாரத்துக்கு பிறகு தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

07.04.2025 - 13.04.2025
இந்த வாரத்துடன் தமிழ் மாதமான பங்குனி மாதம் நிறைவடைந்து சித்திரை மாதம் பிறக்கவுள்ளது. இது அனைவருக்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கும். இந்நிலையில் 07.04.2025 - 13.04.2025 துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகவும், தெளிவாகவும் பார்க்கலாம்.
துலாம் - துலாம் ராசிக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். சனி, குரு உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் நல்லது தான் செய்ய போகிறது. நினைத்த காரியம் எல்லாம் நடைபெறும். உத்யோகம், தொழிலில் நல்ல ஏற்றம் உண்டு. முதலீடு சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். கல்வியில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.
தொழில்
நீண்ட காலமாக திட்டமிட்ட புதிய முயற்சிகளை சாத்தியப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் திக்கு முக்காடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். சுப காரியங்கள் நடக்கும். தொழில் விருத்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புகழ் உயரும். எல்லாம் கிடைத்தாலும் அவ்வபோது மனச்சோர்வு இருக்கத்தான் செய்யும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வயிறு, கல்லீரல், ஒவ்வாமை சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாவிடின் தேவையில்லாத மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. விநாயகர் மற்றும் நரசிம்மர் வழிபாடுகளால் நல் மாற்றங்கள் கிடைக்கும்.
விருச்சிகம் - உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும். முதலீட்டில் லாபம் கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். காரியங்களில் அவ்வப்போது தடைகள் வரும். மனதில் வீண் பதற்றங்கள் வந்து செல்லும். எதிலும் தெளிவான திட்டமிடல் அவசியம். எதிலும் நிதானமாக சிந்தித்து முடிவு செய்வது நல்லது.
உணவு
பூர்வ புண்ணிய அமைப்பு சரி இல்லை. ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. வெளி கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. எந்த உணவாக இருந்தாலும் சூடாக சாப்பிடுவது அவசியம்.
குழந்தைகள்
குழந்தைகளின் பழக்க வழக்கத்தை நன்கு கண்காணிக்க வேண்டும். அவர்களின் உடல்நலத்திலும் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. அபிராமி அந்தாதியை விடாது படிக்க வேண்டும். பார்வதி தேவிக்கு தாமரை மலர் வாங்கி சமர்ப்பித்து வழிபட வேண்டும். இதனால் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். வெள்ளிக்கிழமை மதியம் யாருக்காவது அன்னதானம் செய்வதால் வீண் விரயத்தை தவிர்க்கலாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications