கடக ராசிக்கு வாயில தான் கண்டமே.. கோபத்தை கட்டுப்படுத்துங்க.. தலைக்கு மேல் சுத்துது கத்தி
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூலை 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம் வார ராசி பலன்
கடக ராசிக்காரர்கள் முதுகு வலி, சுழுக்கு போன்ற விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வழுக்கலான இடங்கள், படிகளில் ஏறி இறங்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. மற்றவர்களிடம் வாக்குகளைக் கொடுத்துவிட்டு பணத்திற்கு அலையும் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் உஷாராக இருப்பது நன்மை பயக்கும்.
வார்த்தைகளில் கவனம்
குடும்பத்திலும், வெளியிடத்திலும் பேசும்போது வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதன் மூலம் அபரிமிதமான ஏற்றமும், அனுகூலமும் ஏற்படும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
புதுசு கண்ணா புதுசு
புதிய விஷயங்களைச் செய்வது, புதுமைப்படுத்துவது, முதலீடுகள் செய்வது போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். அதில் மேன்மையும் காணப்படும். ஆடி மாதத்தில் மன அழுத்தங்கள் வராமல் பார்த்துக் காொள்வது நல்லது. பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் பதற்றங்கள் ஏற்படும். பெற்றோரின் ஆரோக்கியத்தை மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
துணையின் பேச்சை கேளுங்க
குலதெய்வ வழிபாட்டை மனதார செய்வது நன்மையை ஏற்படுத்தும். கணவன், மனைவி சொல்வதை கேட்டு நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அவர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். வியாழக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நற்பலன்களையும், அதிர்ஷ்டங்களையும் அள்ளிக் கொடுக்கும்.
பதற்றம் வேண்டாமே
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் பதற்றமில்லாமல் இருப்பது நன்மையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். மனதில் இருந்து வந்த பாரங்ககள் நீங்கும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பெரிய கஷ்டத்தையும், சங்கடத்தையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உறவு முறையில் நட்பு முறையில் யாரிடமும் பகை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
நிதானம் அவசியம்
உறவுகள், நட்புகளிடம் பகைமையை வளர்த்திக் கொள்ளாமல் நிதானமாகப் பேசுவது நல்லது. வேலையாட்களிடம் கோபத்தை தவிர்ப்பது, கடுஞ்சொல்லை தவிர்ப்பது நல்லது. சிவமந்திரங்கள், இந்திராட்சி கவசம் கேட்பது அற்புதத்தை ஏற்படுத்தும். சிவன் வழிபாடு ஏற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications