துலாம் ராசியினருக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. குழப்பத்தை மட்டும் தவிர்த்துக்கோங்க
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூலை 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம் வார ராசி பலன்
துலாம் ராசிக்காரர்கள் அலர்ஜி, சளி, கால் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர், பெரியோருடன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. நிறைய மன அழுத்தங்கள் ஏற்படும். உங்கள் பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவியைப் பற்றி யாராவது ஏதேனும் சொன்னால் அதனை காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எதையும் மனதில் போட்டு யோசித்துக் கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது.
வருத்தப்படாதீங்க
உங்கள் மீது எல்லோருக்கும் அன்புள்ளதால் அதனை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கடந்த காலத்தையும் , இந்த காலத்தையும் நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்வது நல்லது. வருத்தப்படுவதை தவிர்ப்பது நல்லது. குரு 9 இல் இருக்கிறார். பசு மாடுகளுக்கு புதன்கிழமை தோறும் உணவளிப்பது நல்ல பலன்களையும், ஏற்றத்தையும் கொடுக்கும். புதன்கிழமைதோறும் தானம் கொடுப்பதும் நல்லது.
எடுத்த காரியங்களில் வெற்றி
உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். சுப காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள், குடும்பத்தில் அனைத்து விதமான நல்ல விஷயங்களையும் செய்து மகிழ்வீர்கள். 6 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவானால் சத்ருக்கள் விஷயங்களில் வெற்றி ஏற்படும்.
வாகனத்தில் அனுகூலம்
வழக்குகளில் வெற்றி ஏற்படும். தொழிலில் மாற்றம் உண்டாகும். வண்டி, வாகனத்தில் அனுகூலம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தொடர்ந்து நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். மனதில் வரும் குழப்பங்களைத் தவிர்ப்பது நல்லது. துணையை மனதார நம்ப வேண்டும். வருத்தப்பட்டுக் கொண்டே தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
குடும்பம், சமுதாயத்தைச் சார்ந்து வாழ வேண்டும். நீங்கள் மட்டுமே கஷ்டப்படுவதை போன்று நினைப்பதைத் தவிர்ப்பது நல்லது. நிம்மதியாக தூங்குவது நல்லது. இல்லையெனில் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. துலாம் ராசிக்காரர்களுக்கு பார்வதி தேவி வழிபாடு அனைத்து விதமான நன்மைகளையும் ஏற்படுத்தும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications