கடகம் ராசிக்கு டபுள் புரோமோஷன்.. இனிமேல் எல்லாம் இப்படித்தான்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: ஆடி மாதம் 17 ஆம் தேதி பிறக்கவுள்ளது. ஜூலை 14 முதல்14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் துவங்கப் போகிறது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Weekly rasi palan Kadagam Lucky zodiac signs

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதி அற்புதமான பலன்களை பெறப் போகிறீர்கள். தடைபட்ட இழுபறி காரியங்களில் நிறைவேறும். உத்யோகம், தொழிலில் சிறப்பான ஏற்றத்தை காண்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்யோகத்தில் தடைபட்ட நல்ல பலன்கள் கிடைக்கும்.

முன்னேற்றம்

பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் போன்றவற்றில் நல்ல செய்தி வரும். தொழிலில் லாபம் அருமையாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பாராத நேரத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவு குறைந்து இணக்கமான சூழல் உருவாகும்.

மதிப்பு மரியாதை

உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சுப காரிய தடைகள் விலகும். பயணங்களில் ஆதாயம் உண்டு. சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். பூர்விக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும்.

முதலீடு சிறப்பு

மனதில் இருந்த சங்கடங்கள் தீர்ந்து தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உங்களின் விடாமுயற்சியால் இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சியை மேற்கொள்ள இது சரியான காலம். நிலம், தங்கம், பங்குசந்தை முதலீடுகளில் சிறப்பான லாபம் கிடைக்கும்.

கவனம்

உத்யோகத்தில் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. நரம்பு, கண், சளி, சுவாசம், பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாத விஷயம் அல்லது சட்டத்துக்கு புறம்பான விஷயங்களில் தலையிடக் கூடாது.

பரிகாரம்

பணிச்சுமை, அலைச்சல் அதிகரிக்கும். அவ்வபோது பதற்றம் காணப்படும். எனவே கோபம், பதற்றம் தவிர்த்து எதிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சனிக்கிழமை நாளில் உங்கள் வீடு அருகில் உள்ள பெருமாள் அல்லது ஆஞ்சிநேயர் கோயில் சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+