கும்ப ராசிக்கு குதூகலமான காலகட்டம்.. தங்கம், வெள்ளி நகைகளை குவிக்கப் போறீங்க
வார ராசி பலன்: அம்மனுக்குரிய ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆடி 5 முதல் 11 ஆம் தேதி வரையிலான (ஜூலை 21 முதல் 27 வரை) கும்ப ராசிக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமான ஆடி மாதம் பிறந்துள்ளது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். ஆனாலும் குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் கண்டிப்பாக ஏற்படும். அதனால் துணையின் உடல்நிலையில் அதீத கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்றவற்றில் அடுத்தடுத்த நல்ல விஷயங்கள் கைகொடுக்கும் நேரமாக இருக்கம். திங்கள்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்வது அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்க்கும்.
சுப காரியங்கள்
பிள்ளைகள் விஷயத்தில் நல்லவை நடக்கும். உங்களுடைய குடும்பத்தில் கட்டாயமாக சுப காரியங்கள் நடக்கும். அதன் மூலமாக லாபம், சந்தோஷம் ஏற்படும். ஆடி மாதத்தில் மஞ்சள், வெள்ளை நிற வகையிலான அதிகளவில் வாங்கிக் குவிப்பீர்கள். மனதிற்கு திருப்தி, மன நிறைவு உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பண வரவு உண்டாகும்.
பண வரவு
நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல விஷயங்கள், பண வரவுகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் லாபம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள், பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
தடைகள் நீங்கும்
எடுத்த காரியங்களில் எல்லாம் இதுவரை ஏதவதொரு தடைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி அந்த இழுபறியான நிலைமைகள் மாறும். அடுத்தடுத்து நீங்கள் நினைத்த விஷயங்களை செய்வீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம், நம்பிக்கை, யோகம் உண்டாகும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடையும் காலகட்டமாக இருக்கும். திங்கள்கிழமை தெய்வ வழிபாடு நன்மையை ஏற்படுத்தும்.
-
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications