கும்பம், மீனம் ராசிக்கு செல்வத்தைக் குவிக்கும் நேரம்.. கவனமாக இருக்க வேண்டிய 2 விஷயங்கள்
வார ராசி பலன்: ஏப்ரல் 28 முதல் மே 4 ஆம் தேதி கும்பம், மீன ராசியினருக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம்
அதிகளவு நற்பலன்கள் கிடைக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளுடன் இருந்த சங்கடங்கள் நீங்கி அவர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். குழந்தைகளுடன் தொலைதூரம் பயணம் செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
செல்வாக்கு
உங்களின் தனிப்பட்ட செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்த பாதிப்புகளில் தீர்வு கிடைக்கும். தெளிந்த சிந்தனையுடன் உறுதியாக எடுக்கும் முடிவுகளில் பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சக ஊழியர்கள் துணையாக இருப்பார்கள்.
கவனம்
தாய், தந்தை வழி உறவுகளிடம் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முதுகு, கழுத்து, ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மனச்சோர்வு ஏற்படும்.
வாழ்க்கை துணை
கூடா நட்பை தவிர்க்க வேண்டும். தொழிலில் தவறான ஆலோசனை பின்னடைவை ஏற்படுத்தும். முடிவுகளை கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தடைகள் நீங்கி நற்பலன்களை அதிகம் பெற நரசிம்மர் வழிபாடு மிக மிக அவசியம். நரசிம்மர் கவசத்தை அடிக்கடி கேட்பது நற்பலன்களை கொடுக்கும்.
மீனம்
இந்த வாரத்தில் ஏராளமான நற்பலன்களை பெறப் போகிறீர்கள். குரு பகவானின் பார்வையால் அதிர்ஷ்டங்கள் கொட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். பெற்றோர், பெரியோரின் ஆசிர்வாதத்தால் எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உத்யோகம், தொழிலில் இருந்த தடைகள் நிவர்த்தியாகி நல்ல பலன்கள் கிடைக்கும்.
தொழில்
தொழிலில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். உத்யோகத்தில் படிப்படியாக உயர்வு பெற்று உங்கள் திறமைக்கான முழு அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட கால பிரச்னைகளில் தீர்வு காணப்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வீண் விரயம் குறையும். தொழிலில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். விடா முயற்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வாகனம்
பழைய வண்டி, வாகனத்தை மாற்றி புதிய வண்டி, வாகனம் வாங்குவீர்கள். வண்டி, வாகனத்தில் ஆதாயம் உண்டு. உத்யோகம், தொழிலில், கல்வி ஆகியவற்றில் எடுக்கும் திடீர் முடிவுகள் ஆச்சர்யபடுமளவுக்கு நல்ல பலன்கள் கொடுக்கும். மனதில் நிம்மதி ஏற்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து தன்னம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.
கவனம்
கூடா நட்பு பிரச்னைகளை ஏற்படுத்தும். வம்பு, வழக்குகளில் கவனம் தேவை. பல், காது, மூக்கு, தொண்டை, தலை, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நவகிரகத்தில் புதன் பகவான் வழிபாடு நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications