கும்பம், மீனத்துக்கு தொழிலில் வெற்றி மேல் வெற்றி.. வாகனம், வார்த்தைகளில் மிகுந்த எச்சரிக்கை
வார ராசி பலன்: சித்திரை மாதத்தில் கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 21 முதல் 27 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் வளர்ப்பு பிராணிகளின் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். துணையின் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவர்களின் தேக ஆரோக்கியத்தை சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அசையும் அசையா சொத்து
மன அழுத்தம் வரும். தேவையில்லாத யோசனைகள் வரும் என்பதால் நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய ராகு வழிபாடு நல்ல நிம்மதி, பெரிய சந்தோஷத்தை தரும். துர்கை, நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தை தரும். அசையும் அசையா பொருள் சேர்க்கை ஆனந்தத்தை ஏற்படுத்தும். உத்தியோகம், தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை தரும்.
அந்நியர் தலையீடு
எல்லாம் நன்றாக இருந்தாலும் ஏதோ ஒரு சோம்பல், மன அழுத்தத்தில் இருப்பீர்கள். அதில் கவனமாக இருக்க வேண்டும். சித்திரை மாதம் முழுவதும் குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல, நீங்களும் மற்றவர்கள் குடும்ப விஷயத்திலும் தலையிடாமல் இருப்பது நல்லது.
குட் நியூஸ் வரும்
கொடுத்த வாக்கை காப்பற்றக்கூடிய இனிமையான சூழல் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மேலதிகாரிகளால் ஏதாவது ஒரு அறிவுரை, ஆலோசனை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதனால் கோபப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பொறுமையாகச் செல்வது நன்மை பயக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் நிறைய நன்மைகள் கிடைக்கும். நவக்கிரகத்தில் உள்ள சுக்கிரனுக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது. பணம், பொருள், அனுகூலம் உண்டாகும். பல், முட்டி, பாதம், நகங்கள் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். கோபதாபப்படாமல் நிதானமாக இருக்க வேண்டும்.
தொழிலில் மேன்மை
6 ஆம் அதிபதி உச்சமாக இருப்பதால் எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வழக்கு போன்ற விஷயங்களில் பதட்டம் ஏற்படக்கூடிய வாரமாக இருக்கும். அனுமன் சாலிஷா, கோளார் பதிகம், காரிய சித்தி மாலை போன்றவற்றை கேட்பது படிப்பது நல்லது. தொழில் ரீதியான விஷயங்களில் அதி அற்புதம் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
வெற்றி மேல் வெற்றி
எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் துணையின் தேக ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாய் வழி, தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும். மிகப்பெரிய மாற்றம், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். உத்தியோக ரீதியாக எந்தவித மாற்றங்கள் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது நல்லது. எதிர்பார்க்காத நல்ல விஷயத்தை உண்டாக்கும்.
அனுகூலம்
மேலதிகாரிகளிடம் கோபப்படாமல் அனுசரித்துச் சென்றால் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட அனுகூலங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். தெய்வ மார்க்கப் பயணங்கள், ஆன்மிக ரீதியான தொடர்புகளில் எல்லாமே சமசப்தமம் ஏற்படும். வேற்று மொழி, வேற்று மதத்தவர்களால் அதிக ஆதாயம் உங்களுக்கு ஏற்படும்.
வார்த்தைகளில் கவனம்
தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். எல்லா காரியங்களிலும் நம்பிக்கை, அனுகூலம் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போதும், பேசும் வார்த்தைகளிலும் மிகுந்த கவனமாக, எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications