கும்பத்துக்கும், மீனத்துக்கும் தான் போட்டியே.. அதிர்ஷ்டத்தை வாரி குவிக்கப் போறீங்க.. பணம் கொட்டும்
வார ராசி பலன்: கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு சித்திரை 29 முதல் வைகாசி 4 வரை அதவாது மே 12 முதல் 18 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்ப் புத்தாண்டின் சித்திரை மாதம் முடிந்து, வைகாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகங்களின் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த வாரத்தில் கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு முருகர் வழிபாடு அனுகூலத்தை தரும். சுப்பிரமணிய கவசத்தைக் கேட்டுக் கொண்டே இருப்பது நல்லது. ரத்தத்தில் பரவும் தொற்று நோய்களில் அதீத கவனம் தேவை. ரத்த அழுத்தப் பிரச்சனைகள், கொழுப்பு, சர்க்கரை நோய்களில் கவனம் தேவை. கிட்னி, லிவர் செயல்பாடு தொடர்பான விஷயங்களில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மற்றபடி அனைத்து விஷயங்களிலும் ஏற்றமும், அனுகூலமும் உண்டாகும். சுப விரையங்கள் ஏற்படும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் லாபம் உண்டாகும். சுப காரியத் தடைகளில் இதுவரை அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். இனி வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். கும்ப ராசிக்காரர்கள் இருக்கக்கூடிய வீட்டில் இனி அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
எல்லா விதத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தனிப்பட்ட முறையில் இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள் நீங்கும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். ஏற்றமும், அனுகூலமும் உத்தியோகத்திலும், தொழிலிலும், வியாபாரத்திலும் நன்மைகள் ஏற்படும். பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். எதிர்பார்த்த நல்ல காரியங்கள் கைகொடுக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகத் தீரும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ஜென்ம சனியில் இருக்கக்கூடிய காலகட்டத்தில் சூரியன் அதி அற்புதத்தையும், ஏற்றத்தையும் தருவார். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். புதிய கடன்களால் அனுகூலம் ஏற்படும். வண்டி, வாகனங்களால் ஏற்றம் உண்டாகும். மனதில் நிம்மதி உண்டாகும். இனி நிம்மதியான தூக்கத்தைப பெறுவீர்கள்.
உடற்பயிற்சி தினந்தோறும் செய்வது நல்லது. பரம்பரையாக இருக்கக்கூடிய நோய் உபத்திரவம் தலைதூக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. குலதெய்வத்தை மானசீகமாகப் பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது. குலதெய்வ மந்திரத்தை தினந்தோறும் கேட்பது நல்லது. ஏற்றத்தை தரும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், வியாபாரம் ஏற்றம் உண்டாகும்.
தொழிலில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். அடிமைத் தொழிலில் இருந்து விலகி தனிப்பட்ட தொழிலைத் தொடங்குவது ஏற்றத்தை தரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும். முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். தொழில் தொடங்குவதற்கான அமோகமான காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications