மகர ராசிக்கு வீசும் அதிர்ஷ்ட காற்று.. தொட்டதெல்லாம் பொன், அதிர்ஷ்டம்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 30 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கானமகர ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம் வார ராசி பலன்
மகர ராசிக்காரர்களுக்கு அனுகூலமான காலகட்டமாக இருக்கும். மன உறுதியும், நம்பிக்கையும் ஏற்படும். ஏற்றத்தைக் கொடுக்கும் வாரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் அடிவயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஒற்றை தலைவலி போன்றவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் மட்டும் தனிக் கவனம் செலுத்துவது நல்லது. மற்றபடி அனைத்து விஷயங்களும் ஏற்றத்தைக் கொடுக்கும்.
கடன் தீரும்
பழைய கடன்களைத் தீர்த்து முடிப்பீர்கள். அதற்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதமான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அனுகூலமும் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
முதலீடுகள்
முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். சட்ட சிக்கல் தொடர்பான விஷயங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள், பணப் பிரச்சனைகள் அனைத்தும் சீராகும் காலகட்டம். அஷ்டமத்தில் கேது இருப்பதால் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும்போது விநாயாகரை வழிபாடு செய்து தொடங்குவது நல்லது.
பண வரவு
கணபதி காயத்ரி மந்திரம் கேட்டுக் கொண்டு பயணிப்பது நன்மை பயக்கும். வியாபாரத்தில் காணப்பட்டு வந்த பல்வேறு சிக்கல்கள் நீங்கும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். தடைகளும், பாதிப்புகளும் படிப்படியாக நிவர்த்தியாகும். எடுத்த காரியங்களில் வெற்றியும், முன்னற்றமும் ஏற்படும்.
வழிபாடு
நவக்கிரகத்தில் இருக்கும் புதன் வழிபாடு அனைத்து விதமான நன்மைகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். திருவெண்காடு, அகோரமூர்த்தி தரிசனம் செய்வது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் மேன்மை ஏற்படும். எதிரிகள் தொல்லை, கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை, ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொடுக்கும்


Click it and Unblock the Notifications
