மிதுனம், கடக ராசியினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.. பண மழையில் நீச்சல் அடிக்க போறீங்க
வார ராசி பலன்: மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு சித்திரை 29 முதல் வைகாசி 4 வரை அதாவது மே 12 முதல் 18 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்ப் புத்தாண்டின் சித்திரை மாதம் முடிந்து, வைகாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகங்களின் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த வாரத்தில் மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அலர்ஜி, சளி, விட்டமின், கால்சியம் குறைபாடு, தோல், காது, மூக்கு, தொண்டை, மூச்சுவிடுவதில் சிரமம் தொடர்பான பிரச்சனைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். பெருமாள் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். தேக ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவது நல்லது.
எலும்பு முறிவதற்கான வாய்ப்புள்ளதால் வாகனங்களில் வித்தை காட்டுவதை தவிர்ப்பது நல்லது. மற்ற விஷயங்களில் எல்லாம் அமோகமான காலகட்டமாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். தாய் வழி தந்தை வழி உறவில் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்றம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை அடைவீர்கள். விடுபட்ட வேலைகள் கிடைக்கும்.
விடுபட்ட பணங்கள் கிடைக்கும். விடுபட்ட குடும்பத்தில் இருந்த வாழ்க்கை மாறி புதிய திருமண அமைப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் வரும். பெரிய விருதுகள் கிடைக்கும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். தெய்வ காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள்.
தெய்வ காரியங்களில் ஈடுபடுவது, மகான்கள் தரிசனம் என மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு வயிற்றில் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. துர்கை வழிபாடு செய்வது நல்லது. காளி, வாராஹி, மகாலட்சுமி, பிரித்யுங்கிரா, சூளினி, பார்வதியை துர்க்கையாக நினைத்து வழிபடலாம். அனுகூலமான அமைப்பு உண்டாகும். வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். மரியாதை தேடி வரும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
புதிய கெளரவங்கள் வந்து சேரம். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். பெரிய அளவில் அனுகூலம் ஏற்படும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். மரண பயம் நீங்கும். தேக ஆரோக்கியத்தில் நம்பிக்கை ஏற்படும். ஏதோ ஒரு விதத்தில் நன்மையும், அனுகூலமும் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள்.
எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். லாபம், முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் அதிர்ஷ்டம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications