சிம்மம், கன்னிக்கு அதிர்ஷ்ட தேவதை அள்ளித் தரப் போகுது.. இந்த விஷயத்தில் கவனம் கவனம்
வார ராசி பலன்: சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு சித்திரை 29 முதல் வைகாசி 4 வரை அதாவது மே 12 முதல் 18 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்ப் புத்தாண்டின் சித்திரை மாதம் முடிந்து, வைகாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கிரகங்களின் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த வாரத்தில் சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நரம்பு, படபடப்பு பிரச்சனை, ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தோப்புக்கரணம் போடுவது நல்லது. காலில் வலி ஏற்படும். பிள்ளையார் வழிபாட்டை கடைப்பிடிப்பது நல்லது. காரிய சித்தி மாலையை அனுதினமும் வாசிப்பது நல்லது. தொழில் ஏற்றம், உத்தியோக ஏற்றம், வியாபார ஏற்றம், படிப்பு ஏற்றம் ஏற்படும்.
யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். பயணங்கள் எதிர்பார்க்காத நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். சந்தோஷம், அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். எதிர்பார்க்காத நன்மைகள் உண்டாகும். தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் கிடைக்கும். நம்பிக்கை ஏற்படும். மனதில் இருந்து வந்த பாரங்கள் அனைத்தும் நீங்கும்.
தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரும். முக்கியமான அனுகூலங்களைப் பெற்று மகிழ்வீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். ஏற்றமும், நம்பிக்கையும் அனுகூலத்தைப் பெற்றுத் தரும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நரசிம்மர் வழிபாடு அருமையான ஏற்றத்தை தரும். ஜாயிண்ட் பெயின்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தோள் பட்டை, கழுத்து, கை, கால் சுழுக்கு போன்றவை ஏற்படும். நெஞ்சு எலும்பில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
தனம், குடும்பம், பண வரவுகளில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்திலும் நிவர்த்தி ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் ஏற்படுவதற்கான அருமையான நேரமாக இருக்கும். பழைய கடன்களை தீர்த்து முடிப்பீர்கள். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டங்கள் படிப்படியாகக் குறையும்
நீண்ட நாட்களாக மனதிற்குள் இருந்து வந்த மனத் தாங்கல்கள் அனைத்தும் தீரும். தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அனைத்து மாற்றங்களும் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications