துலாம் ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. பிரம்ம முகூர்த்தத்தை மட்டும் மிஸ் பண்ணாதீங்க
வார ராசி பலன்: ஆனி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான அதாவது ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு துர்க்கை, முருகன் வழிபாடு வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம், அனுகூலம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கான யோகம் உண்டாகும். பெற்றோர் பெரியோருடன் வாக்குவாதம், மனத் தாங்கல்களை தவிர்ப்பது நல்லது.
லாபம், அனுகூலம்
பெற்றோர், பெரியவர்களிடம் மனம் விட்டுப் பேசுவது, மனக் கஷ்டங்களைத் தீர்த்துக் கொள்வது நன்மையைத் தரும். லாபமும், அனுகூலமும் ஏற்படும். சிறு சிறு தடைகளும், மன வருத்தங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதற்காக உங்களுடன் இருப்பவர்களிடத்தில் கோபத்தைக் காட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் தடைகள் காணப்படுவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
இந்த தடைகளில் இருந்து தப்பிக்க பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றிவிட்டு அன்றாட பணிகளைச் செய்வது, இரவில் சீக்கிரம் சென்று தூங்குவது நல்ல பலன்களைத் தரும். குடும்பத்தில் பெரிய அளவு நிம்மதியும், அனுகூலமும் ஏற்படும். துணை உங்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது, அவர்கள் மீது உங்களுக்கு இருந்த வருத்தங்கள் படிப்படியாக குறைவது சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
தொழில்
தொழில் ரீதியாக, உத்தியோக ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி, நம்பிக்கை ஏற்படும். சுப விரைய பிராப்தங்கள் அதிகரிக்கும். தேக ஆரோக்கியத்தில் முதுகு, கால், பாதம், சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
சுபவிரையம்
சுப விரைய பிராப்தம் ஏற்படும். ஆனி மாதமாக இருந்தாலும் சுப காரியத்தில் இருந்த குறைகள் நிவர்த்தியாகும். அடுத்தடுத்து அனுகூலம் காணப்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். திடீர் தைரியம், பெரிய அளவு நம்பிக்கை, சந்தோஷம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபமும், முன்னேற்றமும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications