விருச்சிக ராசியினரின் வேலைக்கு வரும் ஆப்பு.. கோபத்தை கட்டுப்படுத்தி, வாய்க்கு பூட்டு போடுவது நல்லது
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 30 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம் வார ராசி பலன்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆனி மாதத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். அதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கோபத்தை தவிர்ப்பது நல்லது
மேலதிகாரிகள் விஷயத்தில் கோபத்தை மட்டும் தவிர்த்துக் கொள்வது மிகுந்த நன்மையைத் தரும். உத்தியோகம் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலையை விட்டு நிற்கிறேன் என்று கூறுவது, கோபப்படுவது, உணர்ச்சிவசப்பட்டு பேசுவதையும், திடீர் முடிவுகளையும் தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகள் உங்கள் மீது கோபப்படுவது, வன்மத்துடன் இருக்கும் நிலை உள்ளது.
கவனம்
அலுவலகத்தில் நீங்கள் செய்யாத தவறுக்காக பழி ஏற்கும் சூழல் உருவாகும். மேலதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் பேசும்போது மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. அங்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு வெள்ளை கொடி காட்டிச் செல்வது தான் நல்லது. வாகனங்களில் செல்லும் போது விருச்சிக ராசியினர் அதீத கவனமாக இருப்பது நல்லது.
வளர்ப்பு பிராணிகள்
படிக்கட்டுகளில் செல்லும்போது, விஷ ஜந்துக்கள், வளர்ப்பு பிராணிகளை அடிப்பது, இருளாக இருக்கும் இடத்தில் செல்வதை தவிர்த்து கவனமாக இருப்பது நல்லது. நிலபுலன்களில் நடக்கும் விருச்சிக ராசியினர் அதீத கவனமாக இருப்பது நல்லது. மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட அண்டாமல் பார்த்துக் கொள்வது நன்மையைத் தரும்.
பரிகாரம்
நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய் பகவானை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் மேன்மையை ஏற்படுத்தும். வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று, அங்குள்ள எல்லா சந்நிதானத்திற்கும் சென்று வருவது, பசுநெய் கொடுத்து வழிபடுவது, குங்குமம், விபூதியை வைத்து வழிபடுவது மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
விருச்சிக ராசிக்கு யோகத்தை தரும் உச்சகுரு.. இந்த ஜூனில் வரப்போகும் பெரிய முன்னேற்றம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications