Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-people-from-june-8-to-14

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மிதுன வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.

அந்த வகையில், ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு உறவுகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் அனுகூலமான காலகட்டம். தொழில் நிமித்தமாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். தொழில் நன்றாக இருக்கும். தனிப்பட்ட முறையில் உங்களுடை செல்வாக்குகள் கூடும். யோக பலன்கள் அதிகரிக்கும் காலகட்டம். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும்.

கவனம்

ஒவ்வாமை விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் அற்புதத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் செல்வாக்கு ஏற்படும். வாக்குகளைக் காப்பாற்றக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் தன்மையாகப் பேசுவதும், கோபப்படாமல் பேசுவதும் நன்மையைத் தரும்.

சுபகாரியம்

யாருக்காகவும் ஜாமீன் கொடுப்பது, கையெழுத்து போடுவதைத் தவிர்ப்பது நல்லது. நிறைய நல்ல விஷயங்கள் நடைபெறும். பல நல்ல விஷயங்கள், சுபகாரியங்கள் நடக்கும். நாம் எதிர்பார்ப்பதை விட பல விஷயங்கள் சாதகமாக நடக்கும். வீட்டில் கண்டிப்பாக தங்கம் சேரக்கூடிய வாய்ப்புள்ளது. தைரியமாக எல்லா காரியங்களையும் செய்து அதில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டு.

வழிபாடு

திறமை வெளிப்படும் காலகட்டம். லாபத்தில் செவ்வாய் இருப்பதால் எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். சந்தோஷம் ரீதியாக 90 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் நன்மைகள் ஏற்படும். உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அலர்ஜி, சளி தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பெருமாள் வழிபாடு உங்களுக்கு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+