தனுசு, மகர ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. ஆனா பிரச்சனையும் சேர்ந்து வருதே.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: வைகாசி மாதம் ஜூன் 1 ஆம் தேதி வரையில் தனுசு மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் தனுசு மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புது முயற்சிகளைச் செய்வீர்கள். சத்ரு நாசம், தேக ஆரோக்கியத்தில் நிம்மதி ஏற்படும். அலர்ஜி, ஒவ்வாமை, மலக்குடல் உபத்திரவம் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகளிடத்தில் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆவது பாடலை சொல்வது நல்ல பலன்களையும் ஏற்றத்தையும் தரும். பூர்வ புண்ணிய தோஷம் இருந்தால் சிறிது கவனமாக இருப்பது நல்லது.
வழக்குகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். தொழில் அமைப்பில் அனுகூலம் உண்டாகும். குருவின் அருளால் அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும். பண வரவுக்கான உத்தரவு உண்டாகும். வேற்று மதத்தினரால் ஆதாயம் உண்டாகும்.
உள்ளூர், வெளியூர் பயணம், கடல் கடந்த பயணம் செய்வீர்கள். குடும்பத்தில் அதீத சந்தோஷங்கள் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகொடுக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும். வண்டி, வாகனத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தியைக் கொடுக்கும். நீண்ட நாட்களாக காணப்பட்டிருந்த சிக்கல்கள் படிப்படியாக சரியாகும்.
மகான்கள் வழிபாடு பெரியளவு நம்பிக்கையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். வெற்றிகள், மிகப்பெரிய ஏற்றம், நம்பிக்கை ஏற்படும். பதவி உயர்வு, புதிய தொழில் அமைப்பு உண்டாகும். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், இன்ஜினியர்கள், மீடியா துறையினர், படைப்பாளிகள் கலைத் துறையினருக்கு முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் அதிக அளவில் யோக பலத்தைப் பெறுவீர்கள். கணவன், மனைவி உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்பத்தில் உங்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற சுணக்கங்கள் ஏற்படும். வியாழக்கிழமை மதிய வேளையில் ஓராண்டுக்கு எலுமிச்சை சாதம், எலுமிச்சை சாறு தானமாக கொடுப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். சுபவிரைய பிராப்தத்தை அதிகரிக்கும்.
பிள்ளைகள் விஷயத்தில் அதீத கவனமாக இருப்பது நல்லது. காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலியில் கவனம் தேவை. சிவன் வழிபாடு, சிவ மந்திரங்களைக் கேட்பது, வில்வம், நல்லெண்ணெய், பசுநெய் தானமாக கொடுப்பது குடும்பத்தில் காணப்படும் சுணக்க சூழ்நிலையை ஜூன் 1 ஆம் தேதிக்குள் நிவர்த்தி செய்து கொண்டு வரும்.
விநாயகரை கும்பிட்டுவிட்டு வாகனத்தை இயக்குவது நல்லது. வாகனத்தால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தியாகும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள். வாகனங்களில் அதிக வித்தை காட்டக்கூடிய மகர ராசிக்காரர்கள் பெரும் பாதிப்புகளுக்கும், சங்கடங்களுக்கும் ஆளாக நேரிடும். சிவாய நமஹ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டிருப்பது நல்லது. பணவரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications