தனுசு ராசிக்கு அதிர்ஷ்டம், ஆபத்து இரண்டும் சேர்ந்து வருது.. குடும்ப விஷயத்தில் மிக மிக கவனம்
வைகாசி மாத ராசி பலன்: சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கிருஷ்ணர் வழிபாடு அற்புதமான பலன்களைத் தரும். சளி தொடர்பான தொந்தரவுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நாராயணியத்தில் வரக்கூடிய 100 ஆவது பாடல்களைக் கேட்பது, வாசிப்பது நன்மையைத் தரும். கணவராக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவனிடம் அன்பு காட்டுவதும் நல்லது.
உங்களுடைய குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடவே கூடாது. அதேபோல, பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எதிரிகள் விஷயங்களில் இருந்து வந்த பலவிதமான மனக்கசப்பு, சங்கடங்கள் பரிபூரணமான நிவர்த்தியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய ராசியினர் தனுசு ராசிக்காரர்கள். உத்தியோகத்தில் பெரிய சிக்கலில் இருந்து மீளப் போகிறீர்கள். குடும்பத்தை விட்டு உள்ளூரிலோ, வெளியூரிலோ, தெய்வ மார்க்கமாகவோ, தொழில் மார்க்கமாகவோ வந்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்வது நன்மையை ஏற்படுத்தி தரும். கணவனுக்கோ, மனைவிக்கோ வரும் பயணத்தால் கட்டாயமாக ஆதாயம் ஏற்படும்.
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஆனந்தத்தையும், பரமானந்தத்தையும் ஏற்படுத்தித் தரும். தொழில் ரீதியாக உத்தியோகத்தில் ஏற்றம், வியாபாரத்தில் ஏற்றம், படிப்பில் ஏற்றம் என்ற நிம்மதியையும், அனுகூலங்களையும் ஏற்படுத்தும், நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
பூமி சம்மந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலங்கள் தேடி வரக் கூடிய வாய்ப்பு ஏற்படும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. வாகனத்தில் அனுகூலம் ஏற்படும். அடுத்தடுத்து படபடவென செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தும் ஏற்றத்தையும், நம்பிக்கையையும் தரும்.












Click it and Unblock the Notifications