Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடக ராசிக்கு ரொம்ப கஷ்டம்.. ஆனாலும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. குருவின் அருளால் மாற்றம் நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 14 ஆம் தேதி விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து பார்க்கலாம்.

you-can-learn-about-the-benefits-remedies-and-divine-worship-that-kadagam-will-receive-this-year-d

கடகம்

கடக ராசி, லக்னக்காரர்கள் அஷ்டமசனியில் இருந்து விடுதலை அடைந்துள்ளார்கள். பாக்கிய ஸ்தானம் எனும் 9 ஆம் இடத்துக்கு சனி பகவான் அமர்ந்திருக்கிறார். சனி 9 ஆம் இடத்துக்கு செல்லும்போதெல்லாம் பூர்வீக சொத்துக்களில் பிரச்சனை வரும். அப்பா மூலமாக, அப்பாவின் பாட்டனார் மூலமாக எல்லாம் பிரச்சனை வரும். சம்பந்தம் இல்லாத இடங்களில் இருந்தெல்லாம் பிரச்சனை வரும்.

அஷ்டமத்தில் சனி இருந்தவரை தப்பான விஷயங்கள் கூட சரியாகத் தென்பட்டிருக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும். இரவில் தூக்கமின்மை ஏற்பட்டிருக்கும். பயங்கரமான அவமானங்கள் போன்றவையால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்து பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்ததால் அதில் நிம்மதி ஏற்பட்டிருக்கும்.

விரைய குரு

தற்போது குரு பகவான் விரைய ஸ்தானத்துக்கு போவதால் நீங்கள் செலவு செய்யும் ஏற்படும். பிள்ளைகளுக்கு, வெளியூர் செல்ல, சுபகாரியத்துக்கு செலவு செய்யும் நிலை ஏற்படும். 9 ஆம் இடம் பாக்கிய ஸ்தானத்தில் சனி போவதால் இருக்கிற வீட்டை விட்டுவிட்டு, பூர்வீக சொத்தை விற்றுவிட்டு வெளியில் செல்லும் நிலை ஏற்படும். அதன் மூலம் குறிப்பிட்ட தொகை வருவதற்கான வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்டம்

விரையத்தில் இருக்கும் குரு சுப விரையங்களைச் செய்வார். பாக்கிய ஸ்தானத்துக்கு செல்லும் சனி கோவில், கோவிலென்று சுத்த வைப்பார். ஆனாலும், கடக ராசியினருக்கு குருவின் பார்வையால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும். 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்தில் குரு பார்வை விழுவதால் சொந்த வீடு வாங்கும் பிராப்தம் உண்டாகும். அம்மாவுடைய அரவணைப்பு உண்டாகும்.

வெளிநாடு செல்லும் யோகம்

படிப்பு விஷயங்களில் நல்ல முன்னேற்றம், மேன்மையைக் காண்பீர்கள். இருக்கும் இடத்தை மாற்றுவதால் கடக ராசியினருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். மும்பை, மகாராஷ்டிரா, ஹைதராபாத் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்தால் அதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது. பிள்ளைகள் படிப்பு, உத்தியோகத்திற்காக உங்களை விட்டு தூரமாகச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

கடன் தீரும்

பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். சுய ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பீர்கள். அவர்களுடைய படிப்பில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். கடன் தீருவதற்கான வாய்ப்புள்ளது. சண்டை, சச்சரவு, வாக்குவாதங்களை சமாளிப்பதற்கான வாய்ப்புள்ளது.

ஆரோக்கியத்தில் கவனம்

அஷ்டமத்தில் ராகு, குரு பார்வையில் இருக்கும்போது அசுரன் நமக்கு துணையாக இருப்பார். பிரச்சனைகள் உள்ள விஷயங்களை குரு பார்வை இருப்பதால் மிரட்டி, உருட்டியாவது வாய்ப்புகளை அடைவார்கள். சண்டை, பிரச்சனை, வம்பு வழக்கு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில், சேமிப்பில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். விரையத்துக்குப் போகும் குருவால் பாதிப்புகள் குறையும். இதெல்லாம் திருப்திக்குரிய விஷயமாக இருந்தாலும் மற்ற விஷயங்கள் சாதகமாக இல்லை.

வழிபாடு, மதிப்பெண்

குலதெய்வ கோயிலுக்குச் சென்று இரண்டு நாட்களாவது தங்கியிருந்து அங்கப் பிரதட்சணம் செய்வது நன்மையைத் தரும். குலதெய்வ வழிபட்டால் வரும் பிரச்சனைகளில் இருந்து காத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கடக ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தின் அடிப்படையில் 65 சதவீதமும், பொருளாதாரத்தில் 70 சதவீதம் நன்மை பயக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+