கடல் நெருப்பால் அழிவு நிச்சயம்.. இந்தியாவே மாறப்போகுது..ராகு கேது பெயர்ச்சியால் நடக்கும் மாற்றங்கள்?

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி 2025: திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால் உலகம் முழுவதும் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது என்பது சர்ப்ப கிரகம், நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இதுவரை மீனத்தில் இருந்த ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்த கேது சிம்மத்துக்கும் போகப் போகிறார். திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி சர்ப்ப கிரகங்களுக்கு ஸ்தான பலம் கிடையாது.

Rahu ketu peyarchi rasi palan Astrology

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி வீட்டில் ராகு உள்ளார். ராகுவின் நட்சத்திரமான சதயம் அந்த இடத்தில் உள்ளதால் வலிமையான சில விஷயங்களை செய்வார். சிம்ம ராசிக்கு கேது வரப்போகிறார். அங்கு மகம் நட்சத்திரம் இருப்பதால் கேதுவும் வலிமையாக அங்கு வருகிறார். உலகத்தில் கெடு பலன் நடப்பதற்கெல்லாம் ராகு கேதுவே காரணம்.

மீனத்தில் இருக்கக்கூடிய சனியால் தங்கமே பாதுகாப்பான முதலீடாக இருக்கும். நிலநடுக்கங்கள், கடல் பொங்குதல், மலைச் சரிவு, காற்று, நெருப்பால் பிரச்சனை ஏற்படும். தீவிரவாதத்தால் அச்சுறுத்தல் ஏற்படும். எல்லைப் பிரச்சனை, போர் தொடக்கமாகும். நகராட்சி முதல் மத்தியில், மாநிலத்தில் ஆள்பவர்கள், அமெரிக்க நாட்டினர்

வரி மேல் வரி போடும் சூழல் ஏற்படும்.

டோல் வரி, வீட்டு வரி, சாப்பிடுவதற்கு வரி, ஆடைக்கு வரி, சோப்பு சீப்புக்கு வரி, வருமானத்துக்கு வரி, ஜிஎஸ்டி வரி, சாலை வரி, எந்தப் பொருள் வாங்கினாலும் வரி என வரி மேல் வரி போடும் சூழ்நிலை ஏற்படும். நடுத்தர மக்கள் அனைவரும் கடனாளியாகக் கூடிய சூழல் ஏற்படும். கிரெடிட் கார்டு மட்டுமே வழ்க்கை என்ற நிலை உண்டாகும். செலவுகளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் புதுப்பிது வரிகளைப் போடுவார்கள்.

பூமியில் இருக்கும் கனிமங்கள், தங்கங்கள் கண்டுபிடிக்கப்படும். கோயில், மலை, குளத்தில் உள்ள தங்க புதையல்கள், தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படும். பெட்ரோலியப் பொருள்கள், விலையுயர்ந்த கனிமங்கள் இந்தியாவில் நிறைய கிடைக்கும். நிறைய ஊர்களில் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படுதால் மக்கள் ஊரை விட்டு காலி செய்யும் நிலை ஏற்படும். அதற்கேற்ப 4 மடங்கு பணம் மக்களுக்கு தரப்படும். இதன் மூலம் திடீர் குபேர யோகத்தை மக்கள் பெறுவார்கள். குறிப்பாக இந்தியாவில் கனிமங்கள், தங்கங்கள் கண்டறியப்படும்.

கும்பத்தில் இருக்கும் ராகு பொக்கிஷத்தை கொடுக்கப் போகிறது. ஏழை நாடுகள் பணக்கார நாடுகள் ஆகும். அரபு நாடுகள் உள்ளிட்ட மற்ற நாடுகள் பெட்ரோலியத்துக்கு மாற்றாக மற்ற பொருள்களை கண்டுபிடிப்பது நல்லது. இல்லையென்றால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாட்டும் நிலை உண்டு. பெட்ரோலியம், டீசல் போன்றவை தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

மீனத்தில் இருக்கும் சனி நல்ல வளர்ச்சியைக் கொடுப்பார். எல்லா இடத்திலும் இயற்கை முறையில் வாகன பயன்பாடு நடைமுறைக்கு வரும். கடல் மாசுபட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். கடலால் பெரிய அழிவுகள் உண்டு. கடலுக்காக பெரிய சட்ட திட்டங்கள் கொண்டு வரப்படும். விசுவாவசு வருடத்தில் ராகுவும் கேதுவும் நெருப்பு, கடல் பிரளயத்தை உண்டாக்கும். ரயில், விமான விபத்துகள் ஏற்படும். காற்றாலைகள் தடைபடும்.

சாட்டிலைட் பிரச்சனைகள் உண்டாகும். விஞ்ஞானம், விவசாயம், மருத்துவம், கால்நடைகளில் புரட்சி உண்டாகும். ஆச்சரியத்தக்க முன்னேற்றம் உண்டாகும். இந்தியர்களுக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+