Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூல்ஸ் மொத்தமாக மாறுது.. இனி லைசன்ஸ் வாங்குவது ஈஸி இல்லைங்க.. வந்தது மிகப்பெரிய விதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற புதிய சில விதிகளை அறிமுகப்படுத்தி மத்திய அரசு ஆணையிட்டு உள்ளது. புதிய விதிகள் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மத்திய மோட்டார் வாகன விதியை பின்பற்றி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

automobile tamil nadu license

அதில், மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும்.

மாநிலத்தின் ஒரு சில இடங்களில் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தடுக்கும் விதமாக சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் கேட்கப்படும் தங்களது கிளினிக்/மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விவரங்களை ஒரு முறை பதிவேற்றம் செய்து கொண்டு தங்களது பெயரினை ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வரும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை முடித்த பின்பு அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் சாரதி மென்பொருளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களின் மருத்துவச் சான்றினை பதிவேற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்.

மருத்துவர்கள் தங்களது விவரங்களை முதலில் உள்ளீடு செய்து தங்களுக்கான சாரதி மென்பொருளில் நுழைவினை ஒரு முறை உறுதி செய்துகொண்டால் போதுமானது. அவ்வாறு முறையாக சாரதி மென்பொருளில் பதிவு செய்து கொண்ட பின்னர் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றினை மருத்துவர்கள் எலக்ட்ரானிக் முறையிலேயே சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.

எனவே தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழினை மின்னணு வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும். இதன் மூலம் போலி மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை முறைகேடாக பயன்படுத்தி வந்தது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும்
தங்களது பதிவுகளை உறுதி செய்வது குறித்தும் நாளை (11.06.2024) காலை 11.00 மணியளவில் மாநிலம்
முழுவதிலுமுள்ள அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஒரு செயல்முறை விளக்கம்
காண்பிக்கப்படும். அதில் கலந்துகொண்டு தங்களது பதிவுகளை இறுதி செய்யும் முறைகள் குறித்து
மருத்துவர்கள் அறிந்துகொள்ளலாம்.

புதிய விதிகள்: அதேபோல் இனி லைசன்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கான எல்எல்ஆர் கட்டணம் செலுத்தும் வசதி நீண்ட நாட்களாக முடங்கிய நிலையிலேயே உள்ளது.

இந்தியாவில் அதிக வாகனங்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ள நிலையில் இரண்டாவதாக தமிழ்நாட்டில் அதிக அளவில் வாகனங்கள் உள்ளன. அரசு பேருந்துகளின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடுதான் முதலில் உள்ளது. தமிழர்கள் பொதுவாகவே வாகன பிரியர்கள்.

இதனால்தான் என்னவோ தமிழ்நாட்டில் புதிய வாகனங்களின் விற்பனைகள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படும் சென்னையிலும் அதிக அளவில் வாகன உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்களால் ஆர்டிஓ அலுவலகங்களிலும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

லைசன்ஸ் விதிமுறை: புதிய லைசன்ஸ் வாங்குவது, லைசன்ஸ் புதுப்பிப்பது, லைசன்சில் புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை செய்வது என்று பல காரணங்களுக்காக மக்கள் ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் மக்கள் இதில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அதோடு லாக்டவுன் சமயத்தில் பலர் புதிய லைசன்ஸ் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+