சென்னை டூ ஆந்திரா டூ பெங்களூர்.. இனி ஒரே அழுத்து! டக்குனு போகலாம்! இதெல்லாம் யோசிக்க முடியாத திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெங்களூர் - எக்ஸ்பிரஸ் வேவை சென்னை பெரிபெரல் ரிங் ரோட்டுடன் இணைக்கும் சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து விதமான அனுமதிகளும் இந்த சாலைக்கு கிடைத்துள்ளது. 116.1 கிமீ சித்தூர் - தச்சூர் விரைவுச்சாலை (NH-716B) என்பது NHAI ஆல் கட்டப்பட்டு வரும் 6 வழி எக்ஸ்பிரஸ் கட்டுப்பாட்டு சாலையாகும், இது சித்தூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) அருகிலுள்ள கீனடம்பள்ளியில் தொடங்கி பொன்னேரி மற்றும் எண்ணூர் அருகே உள்ள தச்சூரில் முடியும்.

இந்த சாலைதான் சென்னை பெங்களூர் - எக்ஸ்பிரஸ் வேவை சென்னை பெரிபெரல் ரிங் ரோட்டுடன் இணைக்க போகிறது.

automobile chennai bangalore


மொத்த மதிப்பிடப்பட்ட செலவு: ரூ. 3,197.56 கோடி
மொத்த நீளம்: 116.10 கி.மீ
பாதைகள்: 6
நிலை: கட்டுமானம் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் நிறைவு பெற்றுவிட்டது
நிலம் தேவை: 885.5 ஹெக்டேர் (ஆந்திரப் பிரதேசத்தில் 525 ஹெக்டேர் மற்றும் தமிழ்நாட்டில் 360.5)
கடைசி தேதி: டிசம்பர் 2025
உரிமையாளர்: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI)
திட்ட மாதிரி: ஹைப்ரிட் ஆன்யூட்டி மோட் (HAM)
வடிவமைப்பு
அதிவேக நெடுஞ்சாலை 70 மீ வரிசை (வலது வழி) மற்றும் 100 கிமீ வேக வரம்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 பெரிய பாலங்கள், 33 சிறிய பாலங்கள், 2 ரயில் மேம்பாலங்கள் (ROBs), 252 நீர் சுரங்கங்கள், 79 வாகன சுரங்கப்பாதைகள், 8 பரிமாற்றங்கள் மற்றும் பல விலங்குகள் கடக்கும் பாதைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

காமராஜர் (எண்ணூர்) மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு நேரடி இணைப்பை வழங்குவதற்காக இந்த விரைவுச்சாலை ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் வழியாக செல்லும்.

ரிங் ரோடு: ரிங் ரோடு - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே ஆகியவற்றை இணைக்கும் வகையில் இது கட்டப்படுகிறது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 132.87 கிமீ தூரத்திற்கு ஏற்கனவே ரிங் ரோடு சாலை கட்டப்பட்டு வருகிறது. சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPRR) என்பது, எண்ணூர் துறைமுகம் - மகாபலிபுரத்தை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் 10 வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச் சாலையாகும். காட்டுப்பள்ளி வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது.

5 பிரிவுகளைக் கொண்ட இந்த புதிய கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே சென்னையின் 4வது ரிங் ரோடாக இருக்கும். சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவொயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இது போக 262-கிமீ நீளமுள்ள பெங்களூர்-சென்னை விரைவுச்சாலை (BCE) முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் தற்போது இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கர்நாடகா மாநிலம் உள்ளே வரும் சாலையில் பணிகள் முடிக்கப்படவில்லை. இதற்கான ஆகஸ்ட் டார்கெட் மிஸ் ஆகி உள்ளது.

இதனால் மொத்தமாக சாலை திறப்பு தள்ளி போகும் வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய பயண நேரமான ஏழிலிருந்து எட்டு மணி நேரத்துடன் ஒப்பிடும்போது, ​​பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இந்த புதிய சாலை இரண்டு முதல் இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 80 கி.மீ வரை குறைக்கும். அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 120 கி.மீ.

BCE திட்டம் என்று அழைக்கப்படும் சென்னை - பெங்களூர் சாலை அதிகாரப்பூர்வமாக NE-7 என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் பெங்களூரு அருகே ஹோஸ்கோட்டையும், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு சாலையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+