சென்னை சிட்டியின் முக்கிய இடத்தில்.. வாயை பிளக்க வைக்கும் 2 மேஜர் திட்டம்.. வாகன ஓட்டிகள் கவனம்
சென்னை: ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2 முக்கியமான திட்டங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் மேற்கொள்ள உள்ளது.
சென்னையின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்றான கிராண்ட் சதர்ன் ட்ரங்க் (ஜிஎஸ்டி) சாலையில் நீண்ட காலமாக நிலவி வரும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

பெருங்களத்தூர் மேம்பாலத்தின் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க ரூ.12.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ஜிஎஸ்டி சாலையில் மேற்கொள்ளப்பட உள்ள எட்டு வழிச்சாலை விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு புதுப்பித்துள்ளது. நகரின் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஜிஎஸ்டி சாலையில்.. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக இந்த விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
முதல் திட்டம்: போக்குவரத்து நெரிசலை குறைக்க எட்டு வழிச்சாலை விரிவாக்கம்:
சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் (சிஎம்டிபி) கீழ், நெடுஞ்சாலைத் துறையானது, பெருங்களத்தூர் மேம்பாலத்தின் அடியில் 1.5 கிமீ நீளத்தை விரிவுபடுத்த உள்ளது. அங்கிருந்து 8 வழி சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்க உள்ளன. வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, எஸ்டான்சியா டெக் பார்க் மற்றும் சிங்கபெருமாள்கோயில் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் அதிகம் கூட்டம் இருப்பதால் முதல் கட்டமாக அந்த பகுதிகளில் இந்த நடைமேடை பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
இங்கே தற்போது, சில பகுதிகள் நான்கு வழிச்சாலையாக உள்ளதால், மழைநீர் தேங்கி நிற்பதால், அடிக்கடி இடையூறுகள் ஏற்படுகின்றன. அடிக்கடி போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. இந்த சிக்கல்களைச் சமாளிக்க 8 வழி சாலை அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன.
ஜிஎஸ்டி மாற்றம்: சென்னை உள்ளே மக்கள் வரவும்.. போகவும் பயன்படுத்தப்படும் முக்கியமான சாலைகளில் ஒன்று ஜிஎஸ்டி சாலை ஆகும். இங்கே மாலை மற்றும் காலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க.. சென்னை ஜிஎஸ்டி சாலையில் 7 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
கிராண்ட் சதர்ன் டிரங்க் (ஜிஎஸ்டி) சாலையில் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, அடுத்த ஆறு மாதங்களில் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே லிஃப்ட் பொருத்தப்பட்ட ஏழு புதிய பாதசாரிகளுக்கான நடைமேடை மேம்பாலங்களை (FOBs) அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, எஸ்டான்சியா டெக் பார்க் மற்றும் சிங்கபெருமாள்கோயில் ரயில் நிலையம் ஆகியவை இந்த புதிய பாதசாரிகளுக்கான மேம்பாலங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களாகும், இவை அனைத்தும் அதிக பாதசாரி போக்குவரத்தை கொண்டு இருப்பதால் அங்கே பாலம் கட்டப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு ₹16.3 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் எட்டு வழிச்சாலையில் சராசரி வாகன வேகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இரண்டாவது திட்டம்:
ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 18.4 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்ட சாலை அமைக்க NHAI திட்டம் போட்டுள்ளது. கிளாம்பாக்கம் - மஹிந்த்ரா சிட்டி இடையே ₹3500 கோடி மதிப்பீட்டில் 18.4 கி.மீ. தூரம் 6 வழி உயர்மட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டம் போட்டுள்ளது. தாம்பரம் - வண்டலூர் இடையே ஏற்கனவே மேம்பாலங்கள் உள்ளதால், கிளாம்பாக்கத்தில் இருந்து இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஐயஞ்சேரி சந்திப்பு, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய 3 இடங்களில் Entry / Exit பாதைகள் அமைக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications