கோவை பார்டரை கிராஸ் பண்ண போறீங்களா? இனி இன்ச் இன்ச்சாக கவனிக்க போறாங்க! அரசு பெரிய முடிவு
கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு - கேரள எல்லையில் உள்ள 14 செக்போஸ்ட்களிலும் தானியங்கி நம்பர் பிளேட் ரெகக்னிஷன் (ANPR) கேமராக்களை பொருத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு - கேரளா மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
14 செக்போஸ்டுகளில் ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்துவதற்கான முன்மொழிவுக்கு, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் எல்லை பகுதிகளில் பொருட்கள் கடத்தப்படுவது தடுக்கப்படும், அதேபோல் எல்லை பகுதிகளில் நடக்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது, இந்த செக்போஸ்ட்களில் சாதாரண கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டவுடன், செக்போஸ்ட்கள் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களையும் பதிவு செய்யும். இந்தத் தரவுகள் காவல்துறைக்கு விசாரணையில் பெரிய அளவில் உதவும். இதனால் அந்த பகுதிகளில் குற்றங்கள் குறையும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேமரா அமைப்பு: இது போக சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களை பிடிக்க சிக்னலுக்கு சிக்னல் மூன்று கால்கள் கொண்ட டிரைபாட் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதை வைத்து விதி மீறல் செய்யும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. உதாரணமாக நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். போலீசால் உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர் போட்டோ எடுத்தால் போதும் அபராதம் உங்களை தேடி வருகிறது.
எப்படி நடக்கும்?: பெங்களூர் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் சென்னையில் இதில் கூடுதல் ஒரு வழிமுறையும் சேர்க்கப்பட்டு உள்ளது. சென்னையில் போலீஸ் மட்டுமின்றி மக்களும் போட்டோ எடுக்க முடியும். மக்களும் போட்டோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய முடியும். அதில் இருக்கும் நம்பரை பார்த்து.. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் சென்றால்.. அந்த நம்பருக்கு தானாக அபராதம் அனுப்பப்படும். இந்த நடைமுறையை கடந்த சில நாட்களாக போலீசார் பின்பற்றி வருகின்றனர்.
போக்குவரத்து விதிகள்; இந்த நிலையில்தான் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய பல்லாயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பல்வேறு விதிகளான வேகமாக ஓட்டுவது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுவது, டிராபிக் லைட்டுகளை பின்பற்றாமல் இருப்பது, கோடுகளை மதிக்காமல் நிற்பது, ரேஷ் டிரைவிங் செய்வது போன்ற காரணங்கள் காரணமாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி சென்னையில் விதிகளை மீறிய 12600 பேரின் லைசன்ஸ் முடக்கப்பட்டு உள்ளது. இதில் 50 சதவிகிதம் பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உளது என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேமரா வந்துவிட்டது: இது போக சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களை பிடிக்க சிக்னலுக்கு சிக்னல் மூன்று கால்கள் கொண்ட டிரைபாட் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதை வைத்து விதி மீறல் செய்யும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதன் மூலம் நேரடியாக விதி மீறல் செய்பவர்களை போலீசார் எளிதாக படம் பிடிக்க முடியும். முதல் கட்டமாக 20 சிக்னல்கள் இந்த கேமராக்களை கொண்டு உள்ளன. இது வரும் நாட்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications