பக்காவான பிளான்.. தமிழ்நாட்டின் முக்கிய நகரத்தில் வருகிறது.. மிகப்பெரிய ரிங் ரோடு.. எங்கே தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தருமபுரியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வெளிவட்ட சாலை அமைக்கும் திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.

தருமபுரி-திருப்பத்தூர் சாலை, கிருஷ்ணகிரி சாலை மற்றும் ஹரூர் சாலையை இணைக்கும் வகையில் தமிழக அரசு 2021ஆம் ஆண்டு இந்த திட்டத்தை முன்மொழிந்தது. மேலும், இது மொரப்பூர் சாலை, எட்டிமடத்துப்பட்டி சாலை, மிட்டாரெட்டிஹள்ளி சாலை உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும். முன்மொழியப்பட்ட சாலையானது, மக்கள் அதிகம் உள்ள பகுதிகளை தவிர்த்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்லவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் உதவும்.

Tirunelveli Automobile

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் சுமார் 50,000 வணிக வாகனங்களும், 1.5 லட்சத்துக்கும் அதிகமான தனியார் வாகனங்களும் உள்ளன. இருப்பினும், சாலைகள் விரிவுபடுத்தப்படாததால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிலேயே இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ரூ.70 லட்சம் விடுவிக்கப்பட்டு அரசு சார்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது NHAI சார்பாக தர்மபுரியில் வெளிவட்ட சாலை அமைப்பதற்கான DPR வெளியிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தர்மபுரியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என NHAI அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் அமையும் ரிங் ரோடு சாலைகள்

ஏற்கனவே தமிழ்நாட்டில் புதிய ரிங் ரோடுகள் அமைப்பதற்கான டிபிஆர் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. நெல்லை, கோவை, திருப்பூர், ஓசூரில் ரிங் ரோடு அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடக்க உள்ளன.

திருநெல்வேலிக்கு 784 கோடி ரூபாய் செலவில் புதிய மேற்கு சுற்றுச் சாலை (ரிங் ரோடு) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சில வாரங்களில் தொடக்கத்தில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

33 கிமீ நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்தில் 14 கிராமங்கள் வழியாக செல்லும் வகையில் புறவழிச் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திட்டத்திற்குத் தேவையான 92.24 ஹெக்டேர் நிலத்தில், 23.53 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் ரூ.78.5 கோடி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும். இதுவரை 95% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு ரயில்வே பாலங்கள் மற்றும் ஒரு ஆற்று (பச்சையாறு) பாலம் கட்டப்படும், மேலும் ஏற்கனவே உள்ள தாமிரபரணி ஆற்று பாலம் இடிக்கப்படாமல் அதன் வழியாகவே பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எங்கே தொடங்கும்?

தற்போதுள்ள மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை (NH-7) திருநெல்வேலி நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் போது, ​​இந்த புறவழிச் சாலை மேற்கு நகரப் பகுதிகளைச் சுற்றி வளைந்து செல்லும். NH-7 இல் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தாழையூத்தில் சாலை நீட்டிப்பு தொடங்கி, நகரின் தெற்குப் பகுதியில் பொன்னக்குடியில் இந்த சாலை முடிவடையும்.

இந்த மேற்கு புறவழிச் சாலை திருநெல்வேலி நகரை நோக்கிச் செல்லும் ஐந்து மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் என்பதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நகரத்திற்கு சிரமமின்றி கொண்டு செல்ல முடியும். மதுரையில் இருந்து கேரளா, தென்காசி, குற்றாலம் மற்றும் மணிமுத்தாறு செல்லும் வாகனங்கள் திருநெல்வேலி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இன்னும் வேகமாக பயணம் செய்ய முடியும்.

மேலும், ராஜபாளையம், தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், திருநெல்வேலி நகர எல்லையைத் தாண்டி உள்ளே செல்லாமலே நாகர்கோவிலுக்குச் செல்லலாம்.இந்தச் சாலையால், நகரில் ஏற்படும் வாகன நெரிசல் பெருமளவில் குறைக்கப்படும். பயணிகளுக்கு பொன்னான நேரமும் எரிபொருள் பயன்பாடும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி சாலை

புதிய சாலைப் பாதுகாப்புக் கொள்கை தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாதகமான பல நடவடிக்கைகள் எடுக்கப்படும், அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக திருச்சியில் ரிங் ரோடு கொண்டு வர உள்ளனர்.

திருச்சி-மதுரை என்.எச்., திருச்சி நகரின் வழியாக செல்லும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை (என்.எச்) இணைக்கும் திருச்சி அரைவட்ட சாலையின் முதல் கட்டத்திற்கான புதிய ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கைக்கு (டிபிஆர்) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) டெண்டர் விட முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி-கரூர் என்.எச். இருவழிச் சாலைக்கான டிபிஆர் முடிவடைந்தாலும், அரைவட்டச் சாலையின் இருபுறமும் திட்டமிடப்பட்டுள்ள பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், NHAI இப்போது நான்கு வழிச் சாலையாக இதை மாற்ற பரிசீலித்து வருகிறது.

அதாவது அரைவட்ட சாலைக்கு பதிலாக.. முழுமையான 4 வட்ட ரிங் ரோடு போல அமைக்க முடிவு செய்துள்ளனர்.

திருச்சி சாலை: ஐந்து தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. திருச்சி நகரத்திற்கு இரண்டு கட்டங்களாக முன்மொழியப்பட்ட மொத்த 46 கிமீ அரைவட்டச் சாலையில், துவாக்குடி (திருச்சி-தஞ்சாவூர் என்எச்), மாத்தூர் (திருச்சி-புதுக்கோட்டை என்எச்), மற்றும் பஞ்சப்பூர் (திருச்சி) ஆகியவற்றை இணைக்கும் 25 கிமீ சாலை பாதி முடிந்துள்ளது. மீதி பணிகள் நடந்து வருகின்றன.

இருப்பினும், கடந்த ஆண்டு டிபிஆர் முடிந்த பிறகும் மீதம் உள்ள 21 கிமீ தூரத்திற்கான குடிமராமத்து பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆரம்பத் திட்டத்தின்படி, நடைபாதைகளுடன் கூடிய இருவழிச் சாலைக்கான DPR முடிக்கப்பட்டதாக NHAI கூறியது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை.

தமிழ்நாடு சாலைகள்: தமிழ்நாட்டில் தற்போதைய சவால்களையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு மாநிலத்திற்காக ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய விரிவான சாலைப் பாதுகாப்புக் கொள்கை மற்றும் அனைத்து சார்புத்துறைகளுக்கான செயல்திட்டம் வகுப்பதற்காக, நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் கண்டறியப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது சாலையில் எப்படி பயணம் செய்ய வேண்டும், சாலை விதிகளை எப்படி அமைக்க வேண்டும், சிட்டி உள்ளே, புறவழி சாலைகளில் சாலை பயணங்கள் எப்படி இருக்கும் என்று இதில் முடிவு எடுக்கப்படும். இந்த விதிகள் வந்ததும் தமிழ்நாட்டில் சாலை விதிகள், பயன் செய்யும் முறை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+