தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஹைவே மூலம் இணைக்கப்படும்.. 2 முக்கிய நகரங்கள்.. சிறப்பம்சம் என்ன தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய 4 வழி சாலை அமைக்கும் திட்டம் போடப்பட்டு உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையில் 8 சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.
1. இந்த புதிய சாலையானது தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று நெடுஞ்சாலை துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தமிழ்நாடு வந்த நிலையில்தான்.. இதன் மீதான கவனம் அதிகரித்துள்ளது.

2. ஆனால் இதில் முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே நிதி செலவிட்டு சாலை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவை மதுரை வழியாக செல்ல வேண்டிய தேவையை தவிர்த்து ராமேஸ்வரத்திற்கு நேரடியாக செல்ல முடியும். இதனால் 2 மணி நேரம் பயண நேரம் குறையும்.
3. இதற்கான டிபிஆர் தயாரிக்கும் பணிகள் விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதற்கான டெண்டர் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகாசி, அருப்புக்கோட்டை, பார்த்திபனூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
4. இதனால் SH42 வழியை நான்கு-வழி நெடுஞ்சாலையாக விரிவுபடுத்துவதை இந்த திட்டம் முதன்மையாக கொண்டு உள்ளது. இதில் முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே நிதி செலவிட்டு சாலை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
5. இது மட்டுமின்றி தற்போது விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் வசிப்பவர்கள் கொச்சி-தனுஷ்கோடி சாலையில் ராமேஸ்வரம் செல்லும் முன் மதுரைக்கு செல்ல வேண்டும். மதுரை வழியாகவே அவர்கள் ராமேஸ்வரம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
6. பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரை இரண்டு வழிச்சாலையாக குறுகி உள்ளது. இதனால் அங்கே வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் இந்த சாலையில்.. தேவையான இடங்களில் உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படும். அதேபோல் சில இடங்களில் சர்வீஸ் ரோடும் அமைக்கப்படும் இதனால் 2 மணி நேரம் பயண நேரம் குறையும்.
7. தற்போது, மதுரை வழியாக செல்லும் கொச்சி - தனுஷ்கோடி சாலைதான்.. மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை. பல லட்சம் பேர் செல்லும் இந்த சாலைதான் ராமேஸ்வரம் செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாக உள்ள இந்த ரோடு தற்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக திணறி வருகிறது.
8. விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, பார்த்திபனூர், பரமக்குடி வழியாக செல்வதாக இருந்தாலும் அது குறுகிய சாலை. இதை தடுக்கவே . சிவகாசி, அருப்புக்கோட்டை, பார்த்திபனூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 வழி சாலைகள் மற்றும் 6 வழி சாலைகளில் தேவைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சாலைகளுக்கான தேவைகள் அதிகரிக்கும் நிலையில்தான் இந்த அறிவிப்பு மக்களுக்கு வரப்பிரசாதமாக வந்து உள்ளது. இதனால் மதுரை செல்லாமல் ராமேஸ்வரம் செல்ல முடியும்.
-
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.. எல்லாமே அடுத்தடுத்து உயருகிறதே.. இனி கட்டுப்படுத்தவே முடியாது! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications