ரீசேல் வேல்யூ.. பார்த்து பார்த்து புதிய வாகனம் வாங்குவாங்க.. கடைசியில் பெருசா சம்பவம் பண்ணுவாங்க
சென்னை: புதிதாய் இருசக்கர வாகனம் அல்லது கார் வாங்க வேண்டும் என ஆசைப்படுவோர், அதன் ரீசேல் வேல்யூ குறித்து ரொம்பவே மெனக்கெடுவார்கள்.. அப்படி வாங்கியவர்களில் 80% பேர் அந்த வண்டியை ஓட்டு ஓட்டுனு ஓட்டி, பழைய இரும்புக் கடைக்கு போகும் நிலையில்தான் விற்க முடிவெடுப்பார்கள்.
பழைய வண்டியை வாங்குவதை விட புதிய வாகனம் வாங்குவதையே பலரும் விரும்புவார்கள்... காரணம் பழைய வண்டியில் பராமரிப்பு செலவு அடிக்கடி ஏற்படும்.. ஏற்கனவே வண்டியை வாங்கியவர்கள் அதை அடித்து துவைத்து விட்டுத்தான் விற்று இருப்பார்கள்..அப்படி விற்ற வண்டியை வாங்கிய காலத்தில் இருந்து, ஏதாவது சிக்கல் வந்து கொண்டே இருக்கும்.. ஒரு கட்டத்தில் ஏண்டா இந்த வண்டியை வாங்கினோம் என்று நினைப்பார்கள்.. அந்த அளவிற்கு சில பழைய வண்டிகள் தொல்லைகள் தரும்.

அதேநேரம் புதிய வண்டி வாங்குவோர், சில வருடங்கள் கழித்து நல்ல விலைக்கு போகுமா அல்லது அடிமாட்டு விலைக்கு போகுமா என்பதை பார்த்து விட்டுத்தான் வாங்குவார்கள்.. ஒரு புதிய வாகனத்தின் விலை என்பது பழைய வாகனமாக மாறும் போது நல்ல விலைக்கு போகுமா இல்லையா என்பதை பொறுத்தே அமைகிறது.. அதேபோல் புதிய வாகனத்தின் விற்பனையுமே, அந்த வாகனத்தின் ரீசேல் வேல்யூவை பொறுத்ததான் நடக்கும்.. இருசக்கர வாகனம், கார், லாரி, சரக்கு வாகனங்கள் என எந்த வாகனங்கள் வாங்கினாலும் இதுவே நிலையாகும்..
புதிய வாகனங்களை பொறுத்தவரை கவனமாக வைத்துக்கொண்டால், குறைந்தது ஐந்த வருடங்களுக்கு பெரிய பிரச்சனைகள் வராது. அவ்வப்போது சர்வீஸ் மட்டும் விட்டால் போதும். இதேபோல் மைலேஜ் நன்றாக கிடைக்கும்.. புத்தம் புதியதாய் இருப்பது, விரும்பிய கலரில், விரும்பிய மாடலில, விரும்பிய டிசைனில் புதிய வாகனங்கள் வாங்க முடியும்.. இந்நிலையில் புதிய வாகனம் வாங்குவோர் ரீசேல் வேல்யூ குறித்து ரொம்பவே மெனக்கெடுவார்கள்.

இதுபற்றி நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், "புதிதாய் இருசக்கர வாகனம் அல்லது கார் வாங்க வேண்டும் என ஆசைப்படுவோர், அதன் ரீசேல் வேல்யூ குறித்து ரொம்பவே மெனக்கெடுவார்கள்.. அப்படி வாங்கியவர்களில் 80% பேர் அந்த வண்டியை ஓட்டு ஓட்டுனு ஓட்டி, பழைய இரும்புக் கடைக்கு போகும் நிலையில்தான் விற்க முடிவெடுப்பார்கள்.
அப்படி விற்கும் நிலை வரும்போது, அந்த வண்டி அவர்களை நோக்கி "யேய்ய்ய்... ஓனரு, என்னைய வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணலையே!" என்று ஒரு பார்வை பார்க்கும். எப்போதோ Resale value என்று ரொம்பவும் மெனக்கெட்டது, நினைவில் வரும்... பிறகென்ன... குப்பென அவர்களுக்குள் வெட்கம் பூக்கும்!" என்று கிண்டலாக கூறியுள்ளார். அந்த பதிவு தற்போது வேகமாக பரவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications