கோவை, கரூருக்கு இந்த வாரமே வருது விடிவுகாலம்.. பிரம்மாண்ட எக்ஸ்பிரஸ் வே.. வெளியான முக்கிய அறிவிப்பு
கோவை: கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான எக்ஸ்பிரஸ் வழிச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) ஆலோசகரை நியமித்துள்ளது. அவர்களின் ரிப்போர்ட் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் தொடக்கத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 2023 நிலவரப்படி, 5,173 கிமீ (3,214.4 மைல்) நீளம் கொண்ட 48 எக்ஸ்பிரஸ்வேக்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் 8,772 கிமீ கட்டுமானத்தில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 1,021 கிமீ அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டுமே இருந்தன.

உத்தரப்பிரதேசம் 1,396 கிமீ (867 மைல்) 8 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
மகாராஷ்டிரா 793.4 கிமீ (493.0 மைல்) 6 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
ராஜஸ்தான் 757 கிமீ (470 மைல்) 3 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
ஹரியானா 609 கிமீ (378 மைல்) 7 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
மத்தியப் பிரதேசம் 244 கிமீ (152 மைல்) எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
சத்தீஸ்கர் 191 கிமீ (119 மைல்) 2 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
கர்நாடகா 171 கிமீ (106 மைல்) 5 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
வடஇந்தியா: தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன. வடஇந்தியாவில் இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் தமிழ்நாட்டில் கட்டப்படவில்லை.
தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
அறிவிப்பு: இந்த நிலையில்தான் கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான எக்ஸ்பிரஸ் வழிச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) ஆலோசகரை நியமித்துள்ளது
வாகனங்களின் அபரிமிதமான எண்ணிக்கையின் காரணமாக பெருகிவரும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, NHAI சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டத்தை முன்வைத்தது. இதையடுத்து NHAI அதிகாரிகள், போக்குவரத்தின் அளவை அளவிடுவதற்கும் புதிய சாலையின் சீரமைப்பைக் கண்டறிவதற்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த திட்டம் NHAI கூட்டங்களில் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து இருந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான ஆயத்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், டிபிஆர் தயாரிக்க ஆலோசகரை NHAI நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர் குழு ஒன்று கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பல்வேறு பகுதிகளுக்கு பலமுறை சென்று டிபிஆர் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
டிபிஆர் தயாரிக்கும் பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு மாதத்திற்குள் அதை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது. இது பின்னர் NHAI தலைமையகத்திற்கு அனுப்பப்படும். இது ஆறு வழி நெடுஞ்சாலையாக இருக்கும். அதேபோல் தேவைப்படும் இடங்களில் சர்வீஸ் சாலைகள் இருக்கும்.
கரூர் மற்றும் கோவை இடையே தற்போதுள்ள நெடுஞ்சாலைக்கு இணையாக கூடுதலாக இரண்டு லேன்களை இந்த சாலை கொண்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திட்டத்திற்கு தேவையான நிலத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரைவு திட்டத்தின்படி , இதற்கு 900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும்.
திட்டத்திற்கு NHAI ஒப்புதல் கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தும் செயல்முறை தொடங்கும். திட்டத்திற்கான இறுதி அனுமதி மற்றும் மதிப்பீடு மே 2024 க்குப் பிறகு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி: இது போக சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் வே வழித்தட கட்டுமானம் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், பாரத்மாலா பரியோஜனா இரண்டாம் கட்டத்தின் கீழ், சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் இரண்டாவது எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை உருவாக்க தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சமீபத்தில் நாடு முழுவதும் சுமார் 6,747 கிமீ தூரத்திற்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ்வேகள், பொருளாதார வழித்தடங்கள் மற்றும் இடை-வழிச்சாலைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்காக ஆலோசகர்களை பணிக்கு அமர்த்தி உள்ளது.
சென்னை-திருச்சி விரைவுச்சாலை 310 கி.மீ நீளமும், பிள்ளையார்பட்டி-தூத்துக்குடி வழித்தடம் 160 கி.மீ நீளமும் இருக்கும். இதை சேர்த்து மொத்தமாக 470 கிமீ தூரத்திற்கு எக்ஸ்பிரஸ் வே சாலை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
ஏற்கனவே அங்கே அமைக்கப்பட்டு உள்ள 4 வழி சாலை பகுதியில் கூடுதல் நிலம் கையகப்படுத்தப்பட்டு அது 8 வழி சாலையாக மாற்றப்படும் என்று தகவல்கள் வருகின்றன. தற்போது இங்கே பயண நேரம் 5. 55 மணி நேரமாக உள்ளது. இது 4 மணி நேரத்திற்கு கீழ் குறையும் என்று கூறப்படுகிறது. இதற்கான பணிகள் நடக்க உள்ளன.
-
20 நாள் பொறுமையா இருந்தா ரூ.70 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்..!! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications