இன்று முதல் புதிய ரூல்.. ஃபாஸ்ட் டாக் வச்சு இருக்கீங்களா? உடனே ரீ சார்ஜ் பண்ணுங்க! இல்லைன்னா சிக்கல்
சென்னை: இன்று நாடு முழுக்க பாஸ்ட் டாக்கில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இனிமேல் குறைந்த பேலன்ஸ் காரணமாக பாஸ்ட் டாக் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய பாஸ்ட் டாக் விதிமுறைகள் காரணமாக பலரும் பாஸ்ட் டாக்கில் மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
சமீபத்தில், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு காலத்தை குறைப்பது மற்றும் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி நேரத்தை எளிதாக்குவது போன்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உலக வங்கியிடம் பல விவரங்களை தெரிவித்தது. FASTag செயல்படுத்தப்பட்டதன் மூலம், சுங்கச்சாவடிகளில் சராசரி காத்திருப்பு நேரம் வியத்தகு முறையில் குறைந்துள்ளது. தற்போது காத்திருப்பு நேரம் வெறும் 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது, இது முந்தைய 714-வினாடி காத்திருப்பில் இருந்து கணிசமான முன்னேற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் புதிய பாஸ்ட் டாக் விதிமுறைகள் நாடு முழுக்க அமலுக்கு வந்து உள்ளன. புதிய விதிப்படி பின்வரும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்,
1. பாஸ்ட் டாக்கில் லோ பேலன்ஸ் இருந்தால்.. எல்லா டோல் கேட்டிலும் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது.
2. சிலருக்கு லோ பேலன்ஸ் காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
3. அதாவது டோல்கேட் அருகே நின்று ரீ சார்ஜ் செய்தால்.. அதை டோல் கேட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இனிமேல் குறைந்த பேலன்ஸ் காரணமாக பாஸ்ட் டாக் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. கே ஒய் சி காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால்.. டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே அதை சரி செய்ய வேண்டும். இந்த வாகனங்களின் பாஸ்ட் டாக் ஏற்றுக்கொள்ளப்படாது.
5. வாகனங்களுக்கு சட்ட ரீதியிலான வழக்கு, சிக்கல் இருந்தால், அதன் காரணமாக பாஸ்ட் டாக்.. பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால் அதை 1 மணி நேரத்திற்கு முன்பே சரி செய்திருக்க வேண்டும்.
6. பிளாக் லிஸ்ட் ஆகி இருக்கும் பாஸ்ட் டாக் எதையும் டோல் கேட்களில் பயன்படுத்த கூடாது. இனிமேல் பிளாக் லிஸ்ட் காரணமாக பாஸ்ட் டாக் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
FASTag பிளாக் லிஸ்ட் ஆகி உள்ளதா என்று எவ்வாறு சரிபார்க்கலாம்:
• நீங்கள் செல்வதற்கு முன் உங்கள் FASTag செயலியில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்காக FASTag வாடிக்கையாளர் போர்ட்டலைப் பயன்படுத்தலாம்.
• அதிகாரப்பூர்வ NPCI போர்ட்டலில் (https://www.npci.org.in/what-we-do/netc-fastag/check-your-netc-fastag-status) உள்நுழையவும்.
• பேலன்ஸ் முறையாக உள்ளதா என்று சோதனை செய்ய வேண்டும்.
• உங்கள் கணக்கிற்கு தேவையான குறைந்தபட்ச தொகையை ரீசார்ஜ் செய்யவும்.
• கே.ஒய்.சி முறையாக இருக்கிறதா .. பிளாக் லிஸ்ட் நோட்டிபிகேஷன் வந்துள்ளதா என்பதை பார்க்கவும்.
• இதை எல்லாம்.. டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
டோல்கேட்
மாற்றங்கள்: தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இதில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை வந்த பின்பே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதை அமல்படுத்த 3 அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அறிவிப்பு 1: பாஸ்ட் டாக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.
அறிவிப்பு 2 : பாஸ்ட் டாக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.
அறிவிப்பு 3 - பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட்ட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications