ஹைவேயில் வேகமா போறீங்களா? நிக்காது சிவாஜி.. பைக், கார் ஓட்டுனர்களே கவனம்! எப்படி வழுக்குது பாருங்க..!
சென்னை: தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. அதிக மழை நேரத்தில் காரை இயக்குவது ஆபத்தானதா? அவசர காலங்களில் அதனை கட்டுப்படுத்த முடியுமா? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கிறது. லேசான சாரல் மழை தொடங்கி கனமழை முதல் மிக கனமழை வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அதே நேரத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது அல்லது மழை நேரத்தில் வேகமாக வாகனங்களை இயக்கும்போது கட்டுப்பாடின்றி கார்கள் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது.
கனமழை: இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர் போக்குவரத்து போலீசார். இதனிடையே மழை நேரங்களில் வாகனம் இயக்குவது பாதுகாப்பானதா? அல்லது மழை நேரங்களில் அவசர காலங்களில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியுமா? என பல கேள்விகள் எழும். இருசக்கர வாகன ஓட்டிகளை பொறுத்தவரை மழை நேரங்களில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். காரணம் சிறிது வேகமாக ஓட்டினாலும் சில நேரங்களில் பிரேக் ஃபெயிலியர் ஆக வாய்ப்புள்ளது.
பிரேக் பிடிக்காது: குறிப்பாக டிஸ்க் பிரேக் மழை நேரங்களில் செயல்படாது என்பதால் அவசர காலங்களில் பிரேக் செய்ய முடியாது. தற்போது சில வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி இருப்பதால் வாகனங்களை உடனடியாக நிறுத்த வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பழைய மாடல் வண்டிகளில் அதிக வேகமாக செல்லும்போது டிஸ்க் பிரேக் கூட செயல்படாது. மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதில் பள்ளங்கள் இருக்கிறதா? வேகத்தடை இருக்கிறதா? என்பது கூட தெரியாது. இதனால் அதிவேகத்தில் செல்லும்போது விபத்துகளில் சிக்க வாய்ப்புள்ளது.
கார் ஓட்டிகள் கவனம்: கார்களைப் பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை வரை காரில் பயணம் செய்வது எளிதாக இருக்கும். ஆனால் பலத்த காற்று மற்றும் கனமழையுடன் பெய்யும் போது கார் ஓட்டுனருக்கு நிறைய சிக்கல்கள் ஏற்படும். காரின் கண்ணாடியில் தண்ணீர் படுவதை துடைக்கும் வைப்பர் குறைவான வேகத்திலேயே இயங்கும். அப்போது பலத்த மழை பெய்யும் போது தொடர்ச்சியாக கார்களின் கண்ணாடி மீது நீர் படும்போது துடைப்பது சற்று சிரமமாக இருக்கும். மேலும் கார்களின் வேகம் அதிகமாக இருக்கும் போது பார்வை தூரமானது வெகுவாக குறையும்.
பிரச்சினை: இதன் காரணமாக விபத்தை தவிர்ப்பதற்காக வேகத்தை குறைப்பது நல்லது. அதேபோல பாதைகளை மாற்றும் போதும், ஒரு வாகனத்தை முந்தும் போதும் அல்லது திரும்பும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே கண்ணாடி ஈரமாக இருப்பதால் தூரத்தில் வரும் வாகனங்களின் பார்வையானது மிக குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக மழை நேரங்களில் வேகமாக கார்களில் பயணம் செய்வது நமக்கு மட்டுமல்ல பிறருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
உராய்வு இருக்காது: தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக அளவு வாகனங்கள் பயணம் செய்வதால் அது கிட்டத்தட்ட ஒரு சிமெண்ட் சாலை போலவே இருக்கும். குறிப்பாக மழை நேரங்களில் காரின் சக்கரங்களுக்கும் சாலைக்கும் இடையே உராய்வு ஏற்படுவது குறைவாக இருக்கிறது. மழை நீரானது கிட்டத்தட்ட ஒரு கிரீஸ் போல செயல்படுவதால் அதிவேகமாக வாகனங்களை இயக்கும்போது அது நெடுஞ்சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும். வேகமாக சென்று கொண்டிருக்கும் போது பிரேக் போடுவது அல்லது வளைவுகளில் திரும்ப முயற்சிக்கும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தும் . எனவே கூடுமானவரை அதிக கன மழை நேரங்களில் கார்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஆட்டோமொபைல் வல்லுநர்கள்.
-
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications