சென்னை டூ திருப்பதி! கண் இமைக்கிற நேரத்தில் பறக்கலாம்.. வந்தது பிரம்மாண்ட ப்ராஜெக்ட்! செம அறிவிப்பு
சென்னை: சென்னை-திருப்பதி NH716 இன் 44 கி.மீ தூரத்தை 750 கோடி செலவில் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.
சென்னையில் இருந்து மும்பை மற்றும் திருப்பதிக்கு சாலை மார்க்கமாக செல்வதற்கான நேரத்தை கணிசமாகக் குறைக்கும் வகையில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 144 கி.மீ. தூரத்திற்கு அகலப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன.

இது சென்னை-சூரத் விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது ரேனிகுண்டா, மகபூப்நகர், அக்கல்கோட், சோலாப்பூர் மற்றும் நாசிக் வழியாகச் செல்லும். இந்த திட்டம் மூலம் சென்னைக்கும் மும்பைக்கும் இடையிலான தூரம் குறைந்தது 120-130 கி.மீ அளவு குறையும் என்று கூறப்படுகிறது.
பிளான் என்ன?: சென்னை-திருப்பதி NH 205, திருவள்ளூரில் இருந்து தமிழ்நாடு-ஆந்திர எல்லை வரை, இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கூடுதலாக, தமிழக-ஆந்திர எல்லையில் இருந்து திருப்பதி வரையிலான நான்கு வழிச்சாலை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது தயாரித்து வருகிறது.
இவை தயாரிக்கப்பட்ட பின் அதற்கான பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கே இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பல பாலங்கள், மேம்பாலங்கள், உயர் மட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளன. ஆனாலும் , NH முழுவதுமாக அல்லது பகுதியளவு எக்ஸ்பிரஸ் வே ஆக மேம்படுத்தப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சென்னை திருப்பதி சாலையில் இதையடுத்து 44 கி.மீ தூரத்தை 750 கோடி செலவில் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் டெண்டர்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ளது.
சாலை மாற்றம்: அதோடு இதன் இணைப்பு சாலைகள் மூடப்படுமா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படவில்லை. பாடி - கொரட்டூர் சந்திப்பில் துவங்கும் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் தற்போது திருநின்றவூர் வரை 22 கி.மீ.க்கு நான்கு வழிச்சாலை உள்ளது. இது, மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும்.
திருநின்றவூர் - திருவள்ளூர் இடையே 17.5 கி.மீ., துாரத்தை அகலப்படுத்தும் பணிகள், 304 கோடி ரூபாய் செலவில் நடந்து, அடுத்த செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, என்.ஹெச்.ஏ.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு, பாடி - திருநின்றவூர் பிரிவில், நிலம் கையகப்படுத்த, மாநில அரசு, 152 கோடி ரூபாய் ஒதுக்கியதைத் தொடர்ந்து, நில உரிமையாளர்களுக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறையினர், காலி நோட்டீஸ் வழங்கினர்.
என்ன திட்டம்: இவர்கள் நிலங்களை காலி செய்ததும் அங்கே கட்டுமான பணிகள் தொடங்கும். NHAI திட்டத்தின்படி, திருநின்றவூர் - திருவள்ளூர் நான்கு வழிச்சாலை NH இன் 17.5 கிமீ நீளம் கொண்டது. இங்கே கூடுதல் நிலம் கையகப்படுத்துதல் தேவையில்லாமல் எதிர்காலத்தில் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு ஏற்ற வகையில் அங்கே நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்க, சூரத்தில் இருந்து சென்னைக்கு 1271 கிமீ நான்கு/ஆறுவழி விரைவுச்சாலையை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த சாலைகள் வரும் பட்சத்தில் திருப்பதிக்கு பயண நேரம் 2 மணி நேரமாக குறையும் என்கிறார்கள்.
சாலை பணிகள்: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விரைவு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படியே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 2 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
சென்னை பெங்களூர் விரைவுச்சாலை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
வருகிறது பாலம்: இந்த நிலையில்தான் இந்த சாலையில் சுமார் 23 கிமீ தூரத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு செல்லும் அளவிற்கு நீண்ட உயர் மட்ட சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விவாதம்: இந்த நிலையில்தான், சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்பட உள்ள சாலை இந்த வருட இறுதிக்குள் முடிந்து ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கண்ட பாலத்தின் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. அதோடு சென்னை பக்கம் இன்னும் சாலை பணிகள் பல இடங்களில் தொடங்கவே இல்லை. இன்னும் பல இடங்களில் 10 சதவிகிதம் மட்டுமே பணிகள் நடந்து உள்ளன. அப்படி இருக்கும் போது எப்படி இங்கே சாலை பணிகள் இந்த வருட இறுதிக்குள் முடியும். அதற்கு வாய்ப்பு இல்லவே இல்லையே என்கிறார்கள்.
அரைகுறையாக பணிகளை முடித்துவிட்டு சாலையை இதனால் திறக்க போகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
2 மணி நேரம்; முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 2 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும் என்று மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார் .
பயண நேரம் குறையும்: ஆனால் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை வட்டாரத்தில் விசாரித்ததில், இத்திட்டத்தின்படி பெங்களூர் கோலாருக்கு அருகில் இருந்துதான் எக்ஸ்பிரஸ் வே கணக்கு துவங்குகிறது. அதேபோல் இந்த பக்கம் சென்னை காஞ்சிபுரம் எல்லை அருகே அருகே எக்ஸ்பிரஸ் வே தொடங்குகிறது . இது பசுமையான நேரான சாலையாக இருப்பதால், எக்ஸ்பிரஸ் வழியில் சுமார் 240 கிமீ தூரம் மட்டுமே.
இதில் ஒரு மணி நேரத்தில் 100- 120 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் எளிதாக செல்லலாம். இதனால் இந்த சாலையில் மட்டுமே 2 மணிநேரம் சாத்தியமாகும். ஆனால் சென்னை சிட்டி, பெங்களூர் சிட்டி உள்ளே செல்ல மேலும் 3 மணி நேரங்கள் ஆகலாம். அதனால் இந்த எக்ஸ்பிரஸ் வே பயணம் 2 மணி நேரம் மட்டுமே. மொத்த பயணம் ஆனால் 5 மணி நேரம் இருக்கும் என்கிறார்கள்.
திட்டத்தின் பின்னணி; சென்னை பெங்களூர் விரைவுச்சாலை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications